பக்கம்:இதய பேரிகை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வீதிதேவர் மயக்கம். நினைத்ததை தனிப்பட்டவர்களிடம் கூறினோம் நிதானிக்காமல் சீறினார்கள் கூட்டங்களிலே அதை எடுத்துச் சொன்னோம். 'அக்ராசனாதிபதி அவர்க ளே' என அழைத்து ஆண்டவனின் திருக்கல்யா ணக் குணங்களைக் கூறி வயிறு நிரப்பிவந்தவர்கள் ளுக்கு நமது மேடை அபாய அறிவிப்பாகத் தெரிந் தது; அலறித் துடித்தார்கள். பேசியதுடன் நிற்கவில்லை. எழுதிக்காட்டி னோம் எண்ணங்களை. அம்மாமித் தமிழிலே அக்ர காரத்துக் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர்களுக்கெல்லாம் எச்சரிக்கையாக ற்று நமது எழுத்து. எரிந்து விழுந்தனர். மா நம்மால் - நம் நினைப்பால் -பேச்சால் -எழுத்தால் -நடுங்கவேண்டியவர்கள் நடுங்கினார்கள். யாருக்காக அந்தப்பணியை மேற்கொண்டோ மோ; அவர்கள் - யார் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டுமோ அவர்கள்,-யார் பெருமைப்பட்டிருக்க வேண்டுமோ; அவர்கள்-அலறித் துடிக்கிறார்கள் என்னும்போதுதான் ஆச்சரியம் பிறக்கிறது நமக்கு. நினைப்பு, பேச்சு, எழுத்தோடு நிற்கவில்லை நாம் நாடக உருவிலே நம் கருத்தைத் தெரிவிக்கப் புறப்பட்டோம். எந்தக் கருத்தை இந்த நாட்டிலே இதுவரையில் மூடிவைத்திருந்தார்களோ அந்தக் கருத்துக்கள் திரையைக் கிழித்துப் புறப்பட்டன, கருத்தால் எழுச்சி பிறந்தது. எழுச்சியைக் கண்ட கயவர் வெகுண்டனர். வெகுள்வது சகஜம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/12&oldid=1688633" இலிருந்து மீள்விக்கப்பட்டது