பக்கம்:இதய பேரிகை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 தய பேரிகை. கருத்தால் பயன்பெறவேண்டியவர்கள் கனல் கக்கிடும் விழியினராய்த் திரிய ஆரம்பித்திருக் கின்றனர். இது கருத்தின் மீது உள்ள வெறுப்பாகக் கூடத் தெரியவில்லை. கருகிப்போன உள்ளத்தின் பொறாமைச் சாம்பல் காற்றிலே பறப்பதாகத்தான் தெரிகிறது. நாம் பேசுகிறோமென்றால் பல்லாயிரவர்-நடிக் கிறோமென்றால் லட்சம்பேர்-நமக்காக அல்ல நாம் வெளியிடும் உண்மைகளுக்காக கூடி நிற்கிறார்கள். அண்ணாவின் பேச்சு அன்பர் ராதாவின் நடிப்பு - நடிப்புப் புலவர் ராமசாமியின் நாடகம்- இவைகளைக் காணுகிற நேரத்திலே-கலைவாணர் கிருஷ்ணனின் வில்லுப்பாட்டு, காலட்சேபம் இவை களைக் கேட்கிற நேரத்திலே கருத்து விருந்து பெறு வோர் ஒருபுறம் குழுமியிருக்கும்போது கருத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் தனிப்பட்டவர்க ளுக்கு இவ்வளவு செல்வாக்கு வளர்ந்துவிட்டதே என்று தப்புக்கணக்குபோட்டு அசூயை இதயத்தை அணைக்க "ஆகா! ஊகூ!" என்று கருத்தின்மீது பாய்ந்து கூச்சல் கிளப்புவது அறியாதார் செய்கை தான் என்றாலுங்கூட அந்தப் பட்டியலிலே பலர் நிற்கிறார்களே என்கிறபோது பரிதாபம் ஏற்ப டத்தான் செய்கிறது. அறிக்கை! மறியல்! அட்டகாசம்! விட்டேனா பார் என்ற உறுமல். உதவி சென்னையிலே தியாகராயர் கல்லூரி நிதிக்காக நடைபெறும் கலாநிகழ்ச்சிகளில் "நீதிதேவன் மயக்கம்' ஒன்று. நீதிதேவன் மயக் கம் அறிஞர் அண்ணாவின் சிந்தனைப் பூந்தோட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/13&oldid=1688635" இலிருந்து மீள்விக்கப்பட்டது