பக்கம்:இதய பேரிகை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணநிதி. 13 திலே பூத்த புதுமலர். இரக்கமற்ற அரக்கன் என இலங்கை வேந்தன் மீது கம்பன் சாட்டிய குற்றத் தை ஆதாரங்களை அள்ளிவீசி பொடிப் பொடி யாக்கிக் காட்டுகிற புரட்சிச் சித்திரம். "என்னை இரக்கமற்றவன் என எழுதி வைத் தீரே கம்பரே! இராமனைக் காட்டுக்குத் துரத்திய கைகேயி காட்டினாளா இரக்கம்? குழந்தையைக்கொன்ற கோட்புலி நாயனாரிடம் உண்டா இரக்கம்? மிதிலை எரியும்போது வேதாந்த விசாரணையிலிருந்த ஜன்கனிடம் கண்டீரா இரக் கத்தை? சீதையை வயிற்றிலே சிசுவுடன் ஆரண் யத்துக்குத் துரத்தினானே இராமன். இரக்கத்தை நினைத்ததுண்டா? அவன் இப்படிப்பட்ட கேள்விகளை கம்பன்மீது வீசுகி றான் நீதிமன்றத்திலே நிற்கும் இராவணன். கம்பன் விழிக்கிறான். நீதிதேவன் தீர்ப்புக்கூற முடியாமல் மயங்குகிறான்.' கம்பனென்ன - யாருமே பதில்கூற முடியாத கேள்விகள் தானே அவைகள் ! ராவணன் உருவிலே அண்ணா நின்று கேட் கிறார் என்றால், கம்பரையா கேட்கிறார்? இல்லை.... கம்பர் நூலுக்கு விழா எடுக்கும் விவேகிகளைப் பார்த்து கேட்கிறார். இதுதான் நீதிதேவன் மயக்கம். இந்த நீதிதேவன் மயக்கம் நடக்கக்கூடா தென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் பார்த்தார்கள் கம்பனின் வாரிசுகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/14&oldid=1688638" இலிருந்து மீள்விக்கப்பட்டது