பக்கம்:இதய பேரிகை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 இதய பேரிகை. கல்லூரி நிதி. அதற்கு அண்ணாவின் நாடகம் இசையரசு தேசிகரின் முயற்சி நாடகத்தின்பெயர் நீதிதேவன் மயக்கம். இதற்கு குறுக்கேநின்றார்கள், வீதிதேவர்கள். விழியை உருட்டினர் - நாடகத்திலே வரும் நீதிதேவன் போல! அதட்டிப்பேசினர் நாடக நீதிதேவனின் குரலைப்போல! மறியல் செய்வோமென மார்தட்டினர். கடை சியில், போலீசாரிடம் போயினர்- வீதிதேவர்களின் கதறல்களைக் கேட்ட போலீஸ் நீதிதேவன் மயக்கம் நாடகத்துவசனங்களை பாடம்செய்ய ஆரம்பித்தது. நாடக நடிகர் யாராவது வர அசௌகரியப்பட் டால்கூட போலீஸ் ஆபீசர் ஒருவரையே அந்த பாத்திரத்தை நடிக்க வைக்கலாம் என்கிற அள வுககுப்போலீசார் நமக்கு நாடகங்களை மனப்பாடம் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். றுதியில் நாடகம் நடந்தேவிட்டது. மக்கள் வள்ளம். மன்றத்திலே இராவணனாக அண்ணா. மேற்கண்ட நிகழ்ச்சிமட்டுமல்ல; இதுபோன்ற நிகழ்ச்சிகள் இப்போது ஏராளமாக ஆகிவிட்டன. நமது நாடகஙகளை நடக்கவொட்டாமல் செய்தால் அதை ஒரு வெற்றியாகக்கருதி பூரிக்கலாம் என்பது அவர்களின் ஆசை. அந்த ஆசையின் எதிரொலிதான் வெருட்டல்- விஷமத்தனமெல்லாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/15&oldid=1688641" இலிருந்து மீள்விக்கப்பட்டது