பக்கம்:இதய பேரிகை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 15 நாடகம் எப்படியிருக்க வேண்டும்; என்கிற இலக்கணத்தைப் போதிக்கிற பெரிய மனிதர்கள் கூட சிலர் புறப்படுகிறார்கள். டதை நாடக உலகத்தில் பல வருடங்கள் பழகிவிட் மட்டும் தகுதியாகக்கொண்டு பேசவரும் இவர்கள் நம் அனுதாபத்துக்குறியவர்தானென்றா லுங்கூட-வேண்டாத வேலைகளில் ஈடுபடுகிறார்களே என்பதுதான் நமது வருத்தம். வீதிதேவர்கள் உலவுகிறார்கள் வீணுரை பேசிக் கொண்டு, அந்தக் கும்பலிலே இவர்கள் பெயரும் சேரஏனதான் விரும்புகிறார்களோ! அனுபவம் மாத்திரம் போதாது-ஆற்றலும் தேவை என்பதை உணரவேண்டும். இதை அவர் கள் நம்புகிற 'ஒளவையார் - முருகன் கதை' கூட எடுத்துக்காட்டும். நாட்டு நிலையைச் சிந்திக்காமல் பொறாமையை அடக்கமுடியாத ஒரே காரணத்திற்காக வீதிதேவர் பக்கம் வீழ்ந்து வீறிட்டுக் கத்துவதில் வீரமுமில்லை; விவேகமுமில்லை! விஷப்புத்திதான் ஒளிவிடுகிறது. நேர்மை உதயமாகும்வரையில் திராவிடர் வாழ்வு உயரும்வரையில் - நீதிதேவன் மயக்கங்கள் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். வீதிதேவர்களின் புலம்பல் வெற்றியளிக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/16&oldid=1688645" இலிருந்து மீள்விக்கப்பட்டது