பக்கம்:இதய பேரிகை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பூம்புகார் மாநாடு. O கம்பராமாயணம் மட்டுமே கவிகைத்தேனாறு, கம்பன் ஒருவன்தான் கவிச்சக்கரவர்த்தி என்றெல் லாம் பேசப்பட்ட நிலைமை கரைய ஆரம்பித்திருக் கிறது இப்போது. கம்பனுக்குமட்டுமே மாலை அணி வித்து மகிழ்ந்தவர்கள் இளங்கோவடிகளுக்கும் மதிப்புதர முன்வந்திருக்கிறார்கள். நாடுதான் கவிதை மக+ நாடு என்று கருதிக்கிடந்த வர்கள் சிலப்பதிகாரமகாநாடு நடத்துகிறஅளவுக்கு பெருநோக்கம் பெற்றிருக்கிறார்கள். நமது கம்பன் மகா திராவிடத்திலே அரசியலில்மட்டுமின்றி, சமு தாயத்தில்மட்டுமின்றி, இலக்கியத் துறையிலும் புரட்சி செய்தவர்கள் அறிவியக்கத்தாராகிய நாம் என்பதை யாரும் மறுக்கமுடியாது - கம்பனுக்குக் கோயில் கட்டி அவனைக் கடவுளாக வணங்குகிற அளவுக்கு முதிர்ந்துபோன மூடநம்பிக்கையை கம்பராமாயண எதிர்ப்புக் கருத்துக்கள் முறியடித்தன. கம்பனை நாம் குறைகூறிய நேரத் திலே நம்மீது வீசப்பட்ட கணைகள், கொஞ்சமல்ல, கொடுஞ்சொற்களால் அர்ச்சிக்கப்பட்டோம். கலை யுணர்ச்சியில்லாதவர்கள் என்று பேசப்பட்டோம். "செவிச்சுவையுணரா வாயுணர்வின் ாக்கள்" என்று சுடு சொல்லால் தாக்கப்பட்டோம். ஆயினும் வெற்றி நமக்குத்தான் கிடைத்தது. கம்பராமாயண நூலே நாட்டில் கிடைக்கமுடியாமல் செய்துவிடவேண்டுமென்பதல்ல. கம்பன் செய்த தவறை நாட்டிலே எல்லோரும் அறிந்துகொள்ள நம் நோக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/17&oldid=1688647" இலிருந்து மீள்விக்கப்பட்டது