பக்கம்:இதய பேரிகை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு.கருணாநிதி. 19 நம்முடைய பேச்சுக்களுக்கு சக்தி உண்டு என் பதைத்தான் கம்பனையே கட்டியணைத்திருந்தவர் கள் சிலப்பதிகாரத்துக்கும் மாநாடு நடத்த முன் வந்திருப்பது காட்டுகிறது. கூடாது, ஆனால் ஒன்று, கம்பனைப்போல ஆக்கிவிடக் இளங்கோவடிகளை! காவிரிப்பூம்பட்டி னத்திலே கூடிய மகாநாட்டில் இந்திரவிழா கொண் டாடும்படியாக உபதேசம் செய்திருக்கிறார் ஆர். கே. சண்முகனார்! அந்த மூடநம்பிக்கைகளை வளர்ப்ப தற்காக இருக்கக்கூடாது சிலப்பதிகார மகாநாடு. "கொங்கணர் கலிங்கர் கொடுங் கருநாடர் பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர் வடவாரியரோடு வண்டமிழ் மயக்கத்துன் கடமலை வேட்டமென் கட்புலம்பிரியாது கங்கைப் பேரியாற்றுக் கடும்புனனீத்தம் எங்கேர மகளை யாட்டிய வந்நாள் ஆரியமன்ன ரீரைஞ்ஞூற்றுவர்க்கு ஒருநீயாகிய செருவெங்கண் விழித்துக் கண்டது கடுங்கட்கூற்றம் என்பனபோன்ற செய்யுட்களை விளக்கி திராவிடரின் பண்டைய வீரத்தை - நீதியை நினைவு படுத்துவதற்கு பயன்படவேண்டும். பூம்புகாரில் கூடி மாநாடு நடத்தியவர்கள் மட்டுமே சிலப்பதிகா ரத்துக்கு உரியவர்களல்ல. சிலப்பதிகார மாநாட் டைப்பற்றி அவர்களை சிந்திக்கத் தூண்டியதே நாம்தான். பூம்புகார் மாநாடு பூரிப்பு தருகிறது என்றாலும் சண்முகம் போன்றவர்கள் இந்திர விழா' போன்ற புது மூடத்தனங்களை வளர்த்து விடக்கூடாதே என்று அஞ்சுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/20&oldid=1688655" இலிருந்து மீள்விக்கப்பட்டது