பக்கம்:இதய பேரிகை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 இதய பேரிகை. தடைபோட்டது எப்போதுதெரியுமா தோழர்களே? நாரணமங்கலத்தார்களை 144 போட்டுக் கடுங் காவல் தண்டனை கொடுத்தது எப்போது தெரியுமா தோழர்களே? நண்பர் நடராசன் பேசப்போன குன்றத்தூரி லே கொடுமையை வாரியிரைத்து குண்டுகளை வீசி ரத்தக்களரியை உண்டுபண்ணியது எப்போது தெரியுமா தோழர்களே? சேலத்திலே தோழர் சித்தையன் முன்னின்று நடத்திய நெசவாளர்கிளர்ச்சியை சாக்காகவைத்து அவர்மீது ஜாமீன் வழக்குத்தொடுத்தது எப்போது தெரியுமா தோழர்களே? காங்கிரஸ் அஹிம்சை ஆட்சியில் என்று பதில் சொல்லுவீர்கள். இல்லை! இல்லை! அதுவல்ல நாம் குறிப்பிடுவது! எழுத்துரிமை பேச்சுரிமை கட்டுப் படுத்தப்படாமல் அரசியல் சட்டம் வகுக்கப்பட்டி ருந்த நேரத்தில்தான் மேலே தீட்டிய தீமைகள் நர்த்தனம் புரிந்தன நாட்டிலே! இப்போது திருத் தப்படும் அரசியல் சட்டத்திலே எழுத்துரிமை பேச்சுரிமையைக் கட்டுப்படுத்தும் திட்டம் வரப் போகிறது. பொது அமைதி”க்கு உகந்தபடி எழுத் துரிமையைக் கட்டுப்படுத்தலாம் என்று திருத்தம் வரப்போகிறது. பொது அமைதி என்று பெயரை வைத்துக்கொண்டு போலிக்காரணங்களை உற்பத்தி செய்து அடக்குமுறைக்கு சுதந்திரமளிக்கப்போகி றார்கள் என்றுதான் நாம் நினைக்கவேண்டியிருக்கி றது. எழுத்து, பேச்சு உரிமைகளுக்கு கட்டுப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/27&oldid=1688678" இலிருந்து மீள்விக்கப்பட்டது