பக்கம்:இதய பேரிகை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி. 27 இல்லாதபொழுதே இந்தத் தொல்லைகள் என்றால், கட்டுப்பாடுவந்துவிட்டால் எல்லையிருக்குமா அடக்கு முறைக்கு ! இப்போது பேசாதே என்கிறார்கள். இனிமேல் பேச நினைக்காதே என்பார்கள். து இனி இப்போது எழுதாதே என்கிறார்கள். மேல் எண்ணாதே என்பார்கள். பலாத்கார பேச் சுக்கள் - பார்ககக் கண்கூசும் ஆபாச எழுத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டியவைதான்; ஆனால், அதற் காகப் பேச்சுரிமை எழுத்துரிமை மூச்சுவிடக் கூடாது நாட்டிலே என்று நவில்வது முதல்தரமான ஜார் ஆட்சி! திராவிட இயக்கத்துக்கு- முன்னேற்றக் கழக வீரர்களுக்கு பெரும் சோதனைக் காலங்கள் வரப் போகின்றன. நம் வளர்ச்சியைக் கண்டு நடுங்கி யிருப்பவர்கள் 'ஒடுங்கமாட்டார்களா' இவர்கள் என்று ஓயாக்கவலைகொண்டிருப்பவர்கள் சென்னை அரசாங்கத்தார். வரப்போகும் அரசியல் சட்டத் திருத்தத்தை அமோகமாக வரவேற்பார்கள். நம் பேச்சின் ஒவ்வொரு எழுத்தையும் கவனிப்பார்கள். நம் எழுத்தின் ஒவ்வொரு வளைவையும் அளந்து பார்ப்பார்கள். நம்மை எதிர்நோக்கியிருக்கும் திட்டங்கள் ஏராளம். தியாகத்தீயிலே குதிக்கவேண்டிய திட்டங் கள் - வரப்போகும் அறப்போர்கள் அதிகம் அதிகம் என்றுதான் இன்றைய சூழ்நிலை சுட்டிக்காட்டு கிறது. அந்தப் போராட்டக் காலங்களிலே புதுப் புது பாணங்கள் நம்மீது தொடுக்கப்படும். அதற்காக அமைக்கப்படும் அஸ்திவாரத்தில் ஒருபகுதிதான் இப்போது வருகிற அரசியல்சட்டத் திருத்தம். நாமோ, அஞ்சி அஞ்சிச் சாகும் கூட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/28&oldid=1688680" இலிருந்து மீள்விக்கப்பட்டது