பக்கம்:இதய பேரிகை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பந்தல் ஆடுகிறது ! பகவத்சிங்குகளின் எலும்புகளை தூண்களாக நட்டு, திருப்பூர் குமரன்களின் நரம்புகளைக் கீற்று களாக முடைந்து போட்டு அமைக்கப்பட்ட அழ கான பந்தல். காந்தீயக் காந்த விளக்குகள் மின் னிட-வ.உ. சிதம்பரத்தின் தியாகத் தோரணங்கள் அசைந்தாடிட அலங்கரிக்கப்பட்ட அருமைமிகு பந்தல். அந்தப் பந்தலிலே அஹிம்சை ஆலவட்டம் சுழல - சத்திய சாமரங்கள் வீச-அன்னை சுதந்தர கொலுவீற்றிருக்கப்போகிறாள் என்று சொல்லிடக் கேட்டோம். சிந்தை குளிர்ந்தோம். த வி யு ம் வந்தாள்,வான் முட்டும் வந்தேமாதர கோஷத்துடன் ! தேவி-சுதந்தரதேவி - அகண்ட கண்களை விசாலமாக்கி அருகிருக்கும் அன்பர்களை அருள்பாலித்து அ அரியாசனத்தமர்ந் தமாடுதாள். தேவி ே தேவிக்குப் படையல்....... பூஜைக்குத் தயார் என்று பூஜாரிகள் எழுந்தோடினர். மணி முழங் கிற்று, மந்திரங்கள் ஒலித்தன. ஆசியாவின் மாணிக்கம் அ கில இந்தியாவின் முடிசூடா மன்னர் தேவியின் பிரதம குருக்கள் பண்டிதநேரு பூஜாச் சாமான்களுடன் வந்தார். 'ஏற்றுக்கொள் தாயே' என்று படையலைக் காட்டினர். பார்த்தாள் தாய். பட படவென அடித்துக்கொண்டது அவள் இதயம். பளிச்சிடும் மின்னல் கண்டதுபோல் கண்ணை மூடிக் கொண்டாள், பழு எலும்பு புறப்பட்ட பஞ்சைகள். பார்வை மங்கிப்போன பசிகாரர்கள், குடல்கருகிய குழந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/30&oldid=1688685" இலிருந்து மீள்விக்கப்பட்டது