பக்கம்:இதய பேரிகை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 இதய பேரிகை. நெடுஞ்செழியனின் பிணத்தைக் காணுவதற்கான முயற்சியில் எதிரிகளால் நடை டபெற்றுங்கூட தளர்ந்துவிடாத தடந்தோள் படைத்த தன்மான வீரர்கள் அறப்போராட்டங்களிலே குதித்தவண்ண மிருக்கின்ற சின்னாளப்பட்டியிலே-தென் தாமரைக் குளத்திலே -ஆறுமுகனேரியிலே சித்தையன் கோட்டையிலே தடையுத்தரவுகளை மீறி கழகத்தின் முன்னணி வீரர்கள் சிறைச்சாலை புகுந்திருக்கிறார் கள். வழக்கு முடிந்து வாரக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ தண்டனை அனுபவிக்கத் தயாராய் நிற்கிறார்கள். நாடெங்கும் கிளைக்கழகம் காணும் நன்முயற்சி கள் ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நிதி நாடகங்கள், நாடகத்திலே நாட்டு நலிவு போக்கும் நல்ல பிரச்சாரங்கள், பிரச்சினைகள் பிரித்து பிரித்து விளக்குவதற்கான சமூகநீதி, எழுத்துரிமை போன்ற மாநாடுகள். இந்த வளர்ச்சியின் வேகத்தைக் காணுகிற எதிர்க்கட்சியினர் தேனீக்களை ஏவுகிறார்கள் அர சாங்கமோ அடக்குமுறையை நீட்டுகிறது. நம்மீது அனுதாபமுள்ள கட்சிகளோ தேர்த லுக்குத் துணைவராதா இந்தத் திரண்ட சக்தி என்று பெருமூச்சு விடுகின் றன. விலைக்கு வாங்க முடியுமா இ சக்தியை என்று வியாபார வியாகூலமடைந்திருக்கிறார்கள் பலர். முட்டி முட்டிப் பார்த்து, மூலையில் உட்கார்ந்து முகாரி பாடத் துவங்கிவிட்டன குட்டிச் சுவற்றுக் குயில்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/9&oldid=1688627" இலிருந்து மீள்விக்கப்பட்டது