பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

99


வாழ்ந்தவர். அவர் ஒரு கப்பல் தலைவர். அவர் பணியாற்றியக் கப்பலில் அடிமைகளைக் கம்பெனி நிர்வாகம் ஏற்றி வந்ததால், அதை எதிர்த்து மனித உரிமைகளுக்காகப் போராடித் தனது பணியை விட்டு விலகியவர். இவர் இந்தியப் பத்திரிகைச் சுதந்தரத்துக்காக, இராசாராம் மோகன்ராயுடன் சேர்ந்துப் போராடிய ஓர் இலட்சிய வீரர் ஆவார்.

‘கல்கத்தா ஜர்னல்’ (Calcutta Journal) என்ற பத்திரிகையை ஜேம்ஸ் 1818-ஆம் ஆண்டில் இந்தியாவில் நடத்தினார். கிழக்கிந்திய கம்பெனியில் நடைபெறும் ஊழல்களை அவர் அஞ்சாமல் வெளியிட்டதோடு நில்லாமல், இந்திய மூடப்பழக்க வழக்கங்களில் ஒன்றான உடன்கட்டை ஏறும் சதியை ஒழிக்க அவர் சேவை செய்தார். அதனால் அவரது பத்திரிகை மக்களிடையே பரபரப்பாக விற்பனையானது.

விடுவார்களா கம்பெனி ஆட்சியாளர்கள் ஜேம்ஸை? அதனால் 1823-ஆம் ஆண்டில் அவரை மீண்டும் தாய்நாடான இங்கிலாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார்கள்!

இங்கிலாந்து சென்ற பக்கிங்ஹாம், அங்கும் வாளாவிராமல் ‘ஓரியண்டல் ஹெரால்டு’ என்ற பத்திரிகையை அங்கே துவக்கி, இந்தியாவில் கம்பெனி செய்யும் அக்கிரமங்களை ஜேம்ஸ் கண்டித்து எழுதினார். அவர் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரானார். கம்பெனிக்கு அளித்து வந்த வணிக ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் மசோதாவை எதிர்த்து வாதிட்டார். இந்தியர்களுக்கும் கம்பெனி நிர்வாகத்தில் உரிய பங்களிக்க வேண்டுமென அவர் போர்க்கொடி உயர்த்தினார்.

பக்கிங்ஹாம், இராசாராமுடன் இணைந்தும், தனித்து நின்றும் தனது பத்திரிகைப் பணியைச் சிறப்பாக நடத்தி, இந்தியப் பத்திரிகை உலகுக்கு சுதந்தரம் வழங்க வேண்டும் என்பதற்காக ஓயாமல் உழைத்தார்.

இவ்வாறாக, இந்தியாவின் வடபகுதியில் பத்திரிகைச் சுதந்தரத்திற்காகப் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த உரிமைப் போர்களைக் கண்ட,