பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

109




அதன் ஆசிரியர் ஜி. சுப்பிரமணிய ஐயர்; இந்தியத் தேசியக் காங்கிரஸ், இயக்கத்தின் நிறுவனத் தூண்களுள் ஒருவராகவும், சேலம் விசயராகவாச்சாரியாரின் தேச உணர்ச்சித் தியாகங்களின் செயற்புகழாலும் ‘இந்து’ நாளேட்டு அந்தக் காலக் கட்டத்தில் வானோங்கி வளர்ந்தது. அதற்காக அரும்பாடு பட்டவர்களும் அந்த இருவரே ஆவர். அதே நேரத்தில் அதன் செய்திகள் வெளியிடும் போக்குகளாலும், மக்கள் அந்தப் பத்திரிகை மீது வைத்திருக்கும் நாட்டுப் பணி சேவைகளாலும், ‘இந்து’ இன்றும் மக்களது மனவானிலே கொடிக் கட்டி பறந்தாடி வருகிறது.

‘சுதேசமித்திரன்’

நாளேடு தொண்டு

‘சுதேசமித்திரன்’ இதழ் 1882-ஆம் ஆண்டில் வாரப்பத்திரிகையாக தவழ்ந்து, வாரம் மும்முறை பத்திரிகையாக 1887-முதல் நடந்து, 1889-முதல் நாளிதழ் என்ற வாலிபமாகி, பிறகு வீழ்ந்துபட்டது. அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரவை என்ற இன்றைய பேரழகுக் கோட்டையை எழுப்பிய கலைஞர்களுள் ஒருவராகத் திகழந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் என்பவரே, ‘சுதேசமித்திரன்’ பத்திரிகை ஆசிரியராகவும் விளங்கியவர் ஆவார். எந்தத் தேசிய எழுச்சியோடு அவர் அதைத் துவக்கினாரோ அதே புரட்சியோடு சுதேசமித்திரனையும் அவர் நடத்தினார் என்பது மறக்கத் தக்க சம்பவமன்று.

மக்கள் கவி

பாரதியார்

விடுதலைக் கவிஞர், மக்கள் கவிஞர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார், அதே சுதேசமித்திரன் நாளேட்டில் 1904-ஆம் ஆண்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய தேசி உணர்ச்சிக் கருத்துக்களாலும், செழுமையான தமிழ் உரை நடையாலும், நாட்டுப் பற்றுக் கொந்தளிக்கும் தேசியக் கீதங்களாலும், சுதேசமித்திரன் ஏடு மக்களிடையே பரபரப்பான