பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பத்திரிகை ஓர் அறிமுகம்




நீதியின் முன் எல்லாரும் சமம் என்றிட; நீதிதேவன் கோல் எடுத்தால் - அது, நியாயக்கோல் - துலாக்கோல்!

எண்ணங்களை ஆட்சி செய்திட எழுத்தாளர்கள் கோல் எடுத்தால் - அது, எழுதுகோல்!

இவ்வாறு எண்ணற்றக் கோல்கள் - சிந்தனைக் கோல்களாய் கணிதக் கோல்களாய் இந்த வியனுலகில் தோன்றினாலும், அவற்றை விளக்கி வியந்திட இந்த நூல் இடம் தராது என்பதால் அவற்றை இங்கே சுட்டிக் காட்டிட முடியவில்லை - நூல் விரியும் என்பதால்!

அரசு அலுவலகங்களில் அல்லது தனியார் நிறுவனங்களில் எழுத்துத் துறையிலே பணியாற்றுபவரை நாம் எழுத்தர் அல்லது எழுத்தாயர் (Clerk) என்று கூறுகின்றோம். அலுவலகக் கடிதப் போக்குவரவு வரையாளர் அவ்வாறு பணிபுரிவதால்; அவரை எழுத்தாளரென அழைக்கின்றோம்.

ஆணாக அவர் இருந்தால் அந்தப் பதிவக அலுவலரை கிளர்க் என்கிறோம். அதே பணிகளைச் செய்பவர் ஒரு பெண்ணாக இருந்தால், அவரை Clerkess என்று ஆங்கிலத்திலும், தமிழில் எழுத்தி என்றும் குறிப்பிடலாம்.

எழுத்தரின் இயல்புக்குரிய போதிய கல்வி அறிவற்றவராக ஓர் எழுத்தர் பணிபுரிவாரானால், அவரை “Clerk’ Less என்றும், அதே எழுத்தர் பணியில் ஒருவர் புலமை சான்றவராகப் பணிபுரிந்தால் அவரை Clerk - Like புலமை எழுத்தர் என்றும் இங்லீஷ் மொழியில் சுட்டுகின்றோம்.

எது எவ்வாறு இருந்தாலும் எழுத்துக்களை பதிவக அலுவலகத்தில் பதிவு செய்பவரை ‘எழுத்தர்’ என்றுதான் பொதுவாகக் குறிப்பிடுகின்றோமே ஒழிய, அவரை எழுத்தை ஆட்சி செய்யும் ஓர் எழுத்தாளர் என்று எவரும் அழைப்பதில்லை. என்ன காரணம் இதற்கு?

ஆங்கிலத்தில் writer என்ற ஒரு சொல் உண்டு. ஏறக்குறைய அது எழுத்தர் என்ற சொற்பொருளையே உணர்த்துவதாக இருந்தாலும், எழுத்தை உருவாக்கி, இலக்கியம் வடிவங் கொடுத்து; எழுத்துக்கள் மூலமாக ஒரு செய்தியை