பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்


தென்காசி நகர் சொக்கலிங்கம் அன்றே விளங்கினார் என்பதுதான் அவருடைய சிறப்பு.

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி

பத்திரிகைத் தொண்டு

‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி என்ற பத்திரிகை ஆசிரியர் திரு.வி.க. நடத்திய ‘நவசக்தி’ என்ற நாளேட்டில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

மக்கள் பேராதரவைப் பெற்ற எழுத்தாளராகப் புகழ் பெற்றவர். வாழ்வோடு ஒட்டிய வளமான தமிழ்நடையை எழுதுவார். தமிழ்ப் பற்றையும், தேசிய உணர்வையும் குழைத்து, அடிமைத்தனத்துக்கு மருந்தாக அளித்து, ஆர்வத்துக்கு விருந்தாகப் படைத்து, படித்தவர்க்கும், பாமரர்களுக்கும் இடையே பலமான பாலமாகத் தனது பத்திரிகையை அமைத்துக் கொண்ட ஒரு சாதனை எழுத்தாளராவார் கல்கி.

‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் கல்கி 1933-ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரைகளில், அவர் எழுதாத பொருள் இல்லை; தழுவாத துறை இல்லை; மீட்டாத உணர்வு இல்லை; இசையா? இங்கிதமாக எழுதுவார்; நாடகமா? அனைவரையும் மெய்மறக்கச் செய்வார்; சரித்திரம் கலந்த நாவல்களா? அவற்றைத் தமிழ் மக்களைத் தேனில் சுவை காண்பதுபோல படித்துச் சுவைக்க வைப்பார்? அன்றாட மனிதனின் கோணங்களையும், அவரது குறும்பான எழுத்துக் குத்தல்களால் மக்களை அறிவு மலர்ச்சியில் மிதக்க வைத்தவர் ‘கல்கி’ எனப்பட்ட கிருஷ்ணமூர்த்தி!

கவிதைத் துறையிலே பாரதியார் உருவாக்கிய பண்புகளை, திருப்பங்களை, உரைநடையில் உருவாக்கிய திறமையான பத்திரிகையாளராகத் திகழ்ந்தவர் கல்கி. செழிப்பான அவரது தமிழ்நடைப் பத்திரிகை, உலகுக்கு ஓர் இலக்கிய நாவல்களாகத் திகழ்ந்ததை இந்தச் செந்தமிழ் நாடறியும்.

‘ஆனந்த விகட’னின்

அற்புதத் தேசப்பற்று

மக்களைச் சிரிக்க வைக்கும்; அதே நேரத்தில் அவர்களைச் சிந்திக்க வைக்கும். விகடத் துணுக்குகளை ஆனந்த விகடன்