பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

143



திருவாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாகர் கோவில் நகராட்சித் தலைவராகவும் பணியாற்றியத் திறமையாளர். பத்திரிகை எழுத்தாண்மையில் மிகச் சிறந்த அறிஞர். இவரது கருத்துக்களை அப்போது மறைமலை அடிகள் போன்ற அறிஞர்கள் மேற்கோள்களாக எடுத்துக் காட்டிப் பேசுமளவிற்குச் சிறந்தவர்.

பூவாளுர் பொன்னம்பலனாரின்

‘புதுவை முரசு, சண்டமாருதம்’

திருச்சி மாவட்டம், பூவாளுர் சிற்றூரைச் சேர்ந்த அ. பொன்னம்பலனார் மிகச் சிறந்த சொற்பொழிவாளர். ‘குடியரசு’ பத்திரிகையின் தொடர் கட்டுரையாளர். புதுச்சேரி அரசு பிரெஞ்சு-இந்திய எல்லைக்குள் நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பேச்சாளர் அவர்.

பொன்னம்பலனார், ‘புதுவை முரசு’, ‘சண்ட மாருதம்’ என்ற பத்திரிகைகளை நடத்தி, சமுதாய மடமைகளைக் கூறுகூறாய்க் கிழித்தெறிந்தவர். சிறந்த கூர்மையான, கடுமையான எழுத்துக்களால் சமுதாய மூடநம்பிக்கைச் சடங்குகளை விமர்சித்து எழுதிய சைவ சமய நெறியாளராகப் பிறந்தவர்.

திருச்சி - திருமலைசாமி

‘நகர தூதன்’ இதழ்

திருச்சி நகரிலிருந்து ‘நகர தூதன்’ என்ற வாரப் பத்திரிகையை, பார்ப்பனர் அல்லாதார் விடுதலைக்கும், தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்கும் பத்திரிகை நடத்தியவர். இவர் இதழ் தமிழ்நாட்டைப் பரபரப்பாக்கியதற்குக் காரணம் திருமலைசாமியின் எழுத்துக்களில் பொதிந்திருந்த கட்டுரைச் சொற்றொடர்கள்தான். கேலியும் - கிண்டலும், நையாண்டியும் - நக்கலும் கொண்ட அவரது தமிழ்ப்பாணி எழுத்துக்கள் - அக்காலத்தில் தமிழ் மக்கள் எல்லோராலும் ஈர்க்கப்பட்ட எழுத்துக்களாகும்.

‘பேனா நர்த்தனம்’ என்ற பகுதியில் கேசரி எனும் பெயரில் திருமலைச் சாமியின் எழுத்துக்கள் ஆடும். ஆட்டங்களைக் கண்டு, வைதீக எதிரிகள் அஞ்சி ஓடும் நிலை பல தடவைகள் நடந்துள்ளன. அவரது ‘நகர தூதன்’ பத்திரிகை