பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


அமைச்சராக அரும் பணியாற்றி வரும் கலைஞர் அவர்களின் உறுதுணை நம்பிக்கை நாயகமாவார்!

ஆற்காடு நகருக்கு என்றென்றும் அழியா வரலாற்றுப் புகழைத் தேடித் தந்த மேன் மக்கள் ஆர்க்காடு சகோதரர்களும் இரட்டையர்களுமான சர்.ஏ. இராமசாமி முதலியாரும், சர்.ஏ. இலட்சுமணசாமி முதலியாரும் ஆவர். அந்த இரட்டை மேதைகளின் அற்புதப் புகழுக்குப் பிறகு, ஆர்க்காடுக்கு மூன்றாவதாகப் புகழ் சேர்த்துப் பெருமைப்படுத்தியவர் ஆற்காடு வீராசாமி என்றால் மிகையன்று.

உவமைக் கவிஞர்

சுரதாவின் ‘சுரதா’

திராவிடரியக்கக் கொள்கை பரவ வேண்டும் என்பதற்காகவும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சமுதாய அரசியல் கருத்துக்களுக்கு உறுதுணையாகவும், திராவிடரியக்க இளம் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காகவும், காவியம், இலக்கியம், சுரதா என்ற கவிதை வடிவப் பத்திரிகைகளை முதன் முதலில் திராவிடர் இயக்க வளர்ச்சிக்காக நடத்திய தனித்திறமை மிக்க கவியாளர் சுரதா.

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைக் கவிதை ஆசானாக ஏற்றவர். அதனால் சுப்புரத்தின தாசன் என்ற பெயரிலுள்ள சுப்பு என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘சு’வோடு, ரத்தினம் என்பதின் முதல் எழுத்தான ‘ர’வைச் சேர்த்து; தாசன் என்ற சொல்லின் முதல் எழுத்தான ‘தா’ வோடு முடித்து, அந்த மூன்று எழுத்துக்களை ஒன்றிணைத்து ‘சுரதா’ என்று பெயரை வைத்துக் கொண்டவர் சுரதா.

தனது கவிதை வட்ட ஆசானின் பெயருக்கு நன்றி காட்டும் வகையில் ‘சுரதா’ என்ற பத்திரிகையைக் கவிதைப் பத்திரிகையாக வெளியிட்டுக் கவிதைத் தொண்டாற்றி வந்தார்.

தமிழ்நாட்டின் இளைய தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கும் கவிதைத் திறமை, உவமை வல்லமை, கவிதை அழகு நடையில் புதுமைகள் அதிகம் அவரது கவிதைகளில் பூக்காடாக மலர்ந்து மணம் பரப்பியதால், இளம் கவிஞர்கள்