பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தற்கால - கட்சி சார்பற்ற தமிழ்ப் பத்திரிகைகள்


சுரந்து கொண்டே வாரி வழங்கியது. விக்ரமன் ஆண்டாண்டாக வெளியிட்ட அமுத சுரபி, தீபாவளி மலர்ச் சோலைத் தோட்டங்களுக்கு ஈடாகுமா குமுதம், குங்குமம் தமிழ் தொண்டுகள்? பருவ இதழ்கள் என்றால் பணம் பண்ணும் சிலந்தி வலைக் காட்சிகளா வாசகர்களை சிக்க வைக்க? இவையெலாம் பத்திரிகைத் தொண்டுகளில் அறிவூட்டும் அறமன்று; காலத்திற்கேற்ப காசு தேடும் திறம்! தரம் ஆகும்!

‘விகடன்’ குடும்ப

பத்திரிகைகள்

ஜெமினி ஸ்டுடியோ எஸ்.எஸ்.வாசன், ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திக் காட்டி வெற்றி பெற்றவர். அந்த விகடன் இதழ் குடும்பத்துள், ‘சக்தி விகடன்’, ‘அவள் விகடன்’, ‘சுட்டி விகடன்’ என்ற் பத்திரிகைகள் வெளிவந்து விற்பனையாகின்றன. மக்களுக்கு இந்த இதழ்கள் என்ன தொண்டாற்றுகின்றன என்பதை விகடன் குடும்பத்தைத் தான் கேட்க வேண்டும். ஆனால், பண வருவாய்க்குத் தொண்டு செய்கின்ற அந்த பத்திரிகைகளைப் பாராட்டலாம். அதுவும் பணம் தேடும் படலத்திற்குரிய ஒரு வருவாய்க் கலையூற்றுக் கண் தானே!

திருச்சி நகர்

‘குறள் மலர்’

திருச்சி பாலக் கரை பகுதியிலிருந்து குறள் மலர் என்றொரு வாரப் பத்திரிகையை திருக்குறள் வீ. முனிசாமி, பி.ஏ.,பி.எல்., நடத்தி வந்தார். திராவிடரியக்க நேரடித் தொடர்பில்லாத் திருக்குறளார், தந்தை பெரியார் சீர்திருத்தக் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட சிந்தனையாளர். 1952 தேர்தலில் தினமணி பத்திரிகை உரிமையாளர் இராமநாத் கோயங்காவை வன்னியர் கட்சி வேட்பாளராக திண்டிவனம் நாடாளுமன்றம் தொகுதியில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்டு இலட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தவர். மிகச் சிறந்த நகைச் சுவைப் பொழிவாளர். அவரிடத்தை இன்றுவரை நிரப்புவாரில்லை!