பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

19



இரத்தம் கெட்டு விட்டது என்றால், அதில் சுத்த இரத்தம் எவ்வளவு? அசுத்த அளவு எவ்வளவு? என்று ஆய்வான் மருத்துவன்.

எப்போது ரத்தம் கெடுகின்றது என்றே சிந்திப்பான் மனோ தத்துவஞானி. ஆனால், தத்துவஞானி என்ன செய்வான் தெரியுமா? அந்த இரத்தம் அசுத்தமானதற்கு என்ன காரணம் என்றே எண்ணுவான், ஆராய்வான்.

எனவே, காரண காரியங்களை ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்தி, அவற்றை ஒழுங்குமுறையிலே ஆய்ந்து விஞ்ஞானம் விடை விளக்கம் அளிப்பதைப் போல, பத்திரிகையாளனும் நாட்டுப் நடப்புகளை, சமுதாய நிறைவு-குறைவுகளைச் சீர்ப்படுத்தும் உண்மைகளைத் திரட்டி மக்கள் முன்பு வைப்பதோடு நில்லாமல், அவற்றை ஆய்ந்து, தொகுத்து, முறைப்படுத்தி, நல்லது-கெட்டதுகளை வகைப்படுத்திக் கூறுவதும், செய்தியாக வெளியிடுவதும் பத்திரிகையாளர்களின் பணிகளாகும். இவ்வாறு செய்யும் பத்திரிகைகளால்தான் நாடும் நலமுறும். மக்களும் வளம் பெற்று வாழ்வர்!

இங்கிலாந்து ஆட்சியை இந்தியாவிலே வளமாக வேரூன்றச் செய்ய வேண்டும் என்ற வேட்கையால், இங்லீஷ் மொழியை மக்கள் கல்வியில் திணித்து, அதை ஆங்கிலேயருக்கு குமாஸ்தா வேலையைச் செய்ய வைக்கும் கருவியாக்கிய லார்டு மெக்காலே பிரபு, 1828-ஆம் ஆண்டில் ஓர் அரசியல் நிர்ணய வரலாற்றை எழுதினார்.

அந்த மெக்காலே பிரபுதான் பத்திரிகையாளர்களுக்கு புது மரியாதையை, மதிப்பை அந்த ஆட்சியிலே உருவாக்கினார். அதாவது, பத்திரிகையாளர்களை அரசாங்கத்தின் நான்காவது தூண் (Fourth Pillar) அதாவது Estate என்று கூறிக் கெளரவப்படுத்தினார்.

மெக்காலே பிரபுவுக்குப் பிறகு வந்த எட்மண்ட் பர்க் என்ற இங்கிலாந்து பிரதமர், மெக்காலே குறிப்பிட்ட அந்த ‘நான்காம் தூண்’ என்ற தகுதிக்கு விளக்கமளித்தபோது, ‘பிரிட்டன் நாடாளுமன்றத்தில் Royalty என்ற அதிகாரம் வகிக்கும்