பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


ஓவியங்களில் - தங்களது மொழியில் கருத்துக்களை எழுதிச் சுற்றுச் சூழல்களில் வாழும் பாமர மக்களைக் கண் காட்சிகள் மூலமாகக் காணச் செய்து; தங்களது எண்ணங்களை அரியதோர் செய்திகளாக ஆங்காங்கே பரப்பி வந்தார்கள்.

சீனா போன்ற நாடுகளில் அங்குள்ள மக்கள் மரப்பலகைகளிலே தங்களது எண்ணங்களை எழுத்தாக்கினார்கள். பட்டுத் துணிகளில் பாதரச சல்பேட் Mercury Sulphate என்ற கலவை மையால் சீன மொழி எழுத்துக்களை எழுதி மக்களிடம் அவரவர் எண்ணங்களைச் செய்திகளாக நடமாட விட்டதாகக் கூறுகிறது சீன வரலாறு.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் அறிவின் மிக்க சான்றோர்களால், அறிஞர்களால், ஓவியர்களால், சிற்பிகளால், புலவர்களால்; அரசு சார்பாகவும், தனிப்பட்டோர் தலைமையிலும் எழுதப்பட்ட எண்ணங்கள் ஒவ்வொரு நாட்டு மக்களிடமும் வலம் வந்திருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கி.மு. ஆறாம் நூற்றாண்டு மத எழுச்சி உருவான காலம். சீனாவின் கன்ஃபூசியம், ஈரானில் ஜொராஸ்டிரம், கிரீசில் பெர்மைசும், கிரேக்க அயோனிய தீவில் ஹொரிக்ளிடசும், ஏதென்சில் சாக்ரட்டீசும் புதிய புதிய தத்துவக் கருத்துக்களை அவரவர் தொண்டர்களோடு ஊரூராகத் தெருதெருவாகப் பரப்பட்ட நேரத்தில், அந்த சமயத் தொண்டர்கள் இந்தியாவிற்குள்ளும் வந்து, இங்குள்ள அறிஞர்களிடம் அவரவர் மதச் செய்திகளைப் பரப்பினார்கள்.

இந்து மதம் என்று ஒன்று அப்போது கிடையாது என்றாலும், அதற்குச் சநாதனிகள், வைதீக மதம் என்று பெயரிட்டிருந்தார்கள். ஆனால்: 1799-ல் சர் வில்லியம் ஜோன்ஸ் இங்குள்ள நீதி நெறிகளைத் திரட்டி, அதற்கு ‘இந்து லா’ Hindu Law என்று ஆங்கிலத்தில் பெயரிட்டார். அதற்குப் பிறகுதான் இந்து மதம் விளம்பர மானது. (இந்தியாவில் - உலகியல் உணர்ச்சிகளில் போதிய அக்கறை காட்டாமல், ஆன்மீக சாதனைகளில் மட்டுமே வெற்றியை நிலை நாட்ட