பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/278

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

ஒவ்வொரு பத்திரிகையும் ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும்!



ஒரு பத்திரிகை 2000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதாக இருந்தால், அதன் சர்க்குலேஷன் விற்பனைப் பற்றிப் பதிவு செய்த ஆடிட்டரின் சான்று பெற்று, ரிஜிஸ்தார் ஆஃப் நியூஸ் பேப்பர், புது தில்லி (Registrar of News Paper, New Delhi) என்ற அலுவலகத்தாருக்கு அனுப்ப வேண்டும்.

அவ்வாறு அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு பத்திரிகை விவரங்களை அனுப்பா விட்டால், பத்திரிகைச் சட்ட விதிகளை மீறியதாக எண்ணி, அந்தப் பத்திரிகை மீது 1970ம் ஆண்டு மார்ச் மாதம் வரை செய்துள்ள சட்டத் திருத்தற்திற்கேற்பவும், 1867ம் ஆண்டில் ஆங்கிலேயர் காலத்து, பத்திரிகை, புத்தகங்கள் சட்டப் பதிவுகேற்பவும், 19K பிரிவின் படி தக்க நடவடிக்கை எடுத்துத் தண்டனையும் கிடைக்க வழி ஏற்படும்.

பதிவாளர்
ஆண்டறிக்கை

இந்தியா முழுவதிலும், அந்தந்த மாநிலங்களிலும் உள்ள எல்லாப் பத்திரிகை விவரங்களையும் மேற்கண்ட ஆண்டறிக்கை விவரங்களின்படி பெற்ற பதிவாளர்தான், இந்திய அரசுக்குரிய முழு ஆண்டறிக்கையை அளிப்பவராவார்.

எனவே, ஒவ்வொரு பத்திரிகையாளரும் அவரவர் ஆண்டறிக்கை விவரங்களைச் சரியான முறையில் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்பினால்தான் அந்த ஆண்டறிக்கையைச் சரியான முறையில் பதிவாளர் அரசுக்கு வழங்க முடியும். அப்படி வழங்கினால்தான், அந்த ஆண்டறிக்கையால் பத்திரிகைகளும் தக்க அரசு வசதிகளைப் பெற்றிட வாய்ப்பாகவும் அமையும்.

திடீரென நுழைந்து
சோதனை முறை!

அவ்வாறு அனுப்பாத பத்திரிகையாளர் அலுவலகங்களுக்கு, பத்திரிகை, புத்தகச் சட்டம் 19F என்ற பிரிவுக்கேற்ப, பத்திரிகைப் பதிவாளரோ, அல்லது அவர் அதிகாரம்