பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

கிரைம் செய்திகள் எவையெவை? அவை அறமா? சேவையா? ஆபத்தா?



அதற்கான எடுத்துக்காட்டுகள்தான் ‘இந்துநேசன்’ பத்திரிகை ஆசிரியர் கிரைம் வழக்கும், ஆளவந்தார் கொலை வழக்கும், ஜெயலட்சுமி என்ற பெண்ணின் போலீஸ் கிரைம் புகார் வழக்கும், காஞ்சி மடாதிபதிகளான இரண்டு சங்காரசாரியார்கள் வழக்குகளின் குற்றப் புகார்களையும் பத்திரிகைகள் வெளியிட்டு வரும் சம்பவங்களாகும்.

எனவே, பத்திரிகைகள் எல்லாம் தங்களுக்கு உருவாகும் ஆபத்து உணர்வுகளைக் கருதாமல், சட்டம், பண்பாடு, அறம், மரபு, சமுதாயப் பொறுப்புணர்ச்சிகளோடு குற்றப் புகார்கள் செய்திகளை வெளியிடும் உண்மைச் செய்திகள் தான் என்றால், அவை மக்களால் பாராட்டப்படும் செய்திகளே! மிகையன்று!