பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/305

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



21


மத்திய - மாநில அரசுகளிடம்
எவ்வாறு செய்திகளைத் திரட்டலாம்


குறிப்பு :- செய்தி திரட்டும் பணியாளர் தமது பத்திரிகைக்கு எவ்வாறு செய்திகளைச் சேகரிக்கலாம்; திரட்டிய செய்திகளை எப்படியெப்படி அதன் முக்கியத்திற்குரியவாறு எழுதலாம் என்பதைப் இப்பகுதியில் புரிந்து கொள்ளலாம்.

மாநில அரசுச்
செய்தி வகைகள்

நமது நாடு மக்களாட்சி நாடு. அதற்கேற்ற வகையில், அரசுத் துறைகள், மாநகராட்சி அலுவல்கள், பேரூராட்சி பணிகள், ஊராட்சி ஒன்றிய அமைப்புப் பிரிவுகள், சிற்றூராட்சி அதாவது ஊராட்சி மன்ற வேலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்கள் அந்தந்த ஆட்சித் துறைகளுக்கு ஏற்றவாறு இயங்குகிறார்கள்.

இந்த மன்றங்களின் கொள்கைகள் - நடவடிக்கைகள், செயல் திட்டங்கள், பொது மக்களது வாழ்க்கை முறைகளை மேம்படுத்தவே பணியாற்றுகின்றன.

அரசு அதிகாரிகளும் அந்த ஆட்சி மன்றங்களின் பணிகளை இயக்குபவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த ஆட்சி மன்ற நடவடிக்கைகளைப் பொது மக்கள்