பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/323

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

321


கட்சிக்காரர்கள் தான் என்பதை மறந்து விட்டரா நண்பர் சிவஞானம்?

அண்ணா அவர்களது இந்தப் பேச்சை, அப்போதிருந்த பத்திரிகைச் செய்தியாளர்கள் எல்லாம் வந்திருந்து குறிப்பு எடுத்தார்கள். பொழுது விடிந்து எல்லா பத்திரிகைகளையும் புரட்டிப் பார்த்தால் ஓர் இதழிலும் அண்ணா அவர்கள் ஆற்றிய உரைச் சுருக்கம் அறவே ஒரு பாரா கூட வெளியிடப்படவில்லை.

என்ன காரணம் என்று அந்தப் பத்திரிகைச் செய்தியாளர்கள் அனைவரையும் விசாரித்தால், அந்தப் பேச்சுக்களை வெளியிட ‘முரசொலி, தனியரசு, மாலை மணி, நம்நாடு போன்ற நாளேடுகள் இருக்கின்றனவே என்று பத்திரிகை உரிமையாளர்கள் கூறி விட்டார்கள் என்று அந்தந்த இதழ்களது செய்தியாளர்கள் கூறினார்கள்.

எனவே, அண்ணா அவர்களது அந்தப் பேச்சை ‘முரசொலி’, தனியரசு, மாலை மணி, நம்நாடு போன்ற கட்சி ஏடுகள் மட்டுமே அன்று வெளியிட்டனவே தவிர, பொது மக்கள் நலம் நாடும் எந்த ஏடுகளும் வெளியிடவில்லை. அந்தக் காலம் எப்படிப்பட்ட நேரம் தெரியுமா? Hindu போன்ற நாளேடுகள் எல்லாம் Annadurai also spoken என்று எழுதப்பட்டக் காலமாகும்.

பொதுக்கூட்டங்களுக்குச் செய்தி சேகரிக்கச் செல்கின்ற செய்தியாளர்கள், கூட்டங்கள் நடைபெறும் காரணங்களைச் சிந்தித்தும், பேசுபவர்கள் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் செய்திகளைச் சேகரிக்க வேண்டும் என்பதை மேற்கண்ட அண்ணா பேச்சு உணர்த்துக்கின்றது அல்லவா? கட்சி பத்திரிகைச் செய்தியாளர்கள் அண்ணா பேச்சை எடுத்து வெளியிட்டார்கள். அதுதானே சரி!

அந்தப் பொதுக் கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சுக்களைச் செய்தியாளர்கள் சரியாகக் குறிப்பெடுக்காமல் விட்டுவிட்டார்கள். காரணம் என்ன என்று கேட்டதற்கு,