பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/335

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

333


இயல் ஆகியவற்றில் போதிய பயிற்சியும், நினைத்த நேரத்தில் அதை எதிரொலிக்கும் சிந்தனை வளமும் இருக்க வேண்டும்.

ஒருவர் எழுதுகோல் ஏந்தும் முன்பே, மேற்கண்ட சாதனைகளை உடையவராக ஆசிரியர் இருப்பது பத்திரிகைப் பெயருக்கு நல்லது. ஏனென்றால், அவை ஆதாரமாகவும் (Reference) அல்லது ஆசிரியருக்குப் புறவரணாகவும், களக்காப்பரணாகவும் திகழலாமில்லையா?

இந்த மேற்கோள் சான்று ஆதாரங்களில் பல வகை உண்டு. பார்வைக்குரிய புத்தகம் (Book of Reference) தேவை நோக்குக்கு ஏற்பக் குறிப்பும் (Cross Reference), மாட்டேற்றக் குறிப்பு (in Reference to) தொடர்பாகவும், சட்டமன்றம் சம்பந்தம் பற்றிய ஆதார உணர்வுகளும் (Legislation by Reference), நூலக மேற்கோள்களைக் குறிக்கும் திறமுடையவராகவும் (Library Reference), எழுதும் கட்டுரைகளில் (Reference Marks) உடுகுறி முதலிய ٭׆‡ §lL , சுட்டுக் குறியீடுகள் உணர்வாளராகவும் (Terms of Reference) ஆய்வுரிமை எல்லை பற்றிய வாசகங்கள் உடைய வராகவும் (With reference to) எது எப்படி இருந்தாலும், எவ்வாறாக இருந்தாலும் என்ற வகையில் பல மேற்கோள்களை நிறுவும் சான்றாதாரங்கள் இருக்கும் ஒரு பத்திரிகை ஆசிரியன் மேற்கண்டவற்றை, பாடமாகப் பெற்றிருத்தல் மிகவும் சிறந்ததாகும்.

இந்த ஆதாரங்களை எங்கெங்கு தேவையோ, அங்கங்கே எல்லாம், கருத்துக்கள் முடியும்போது ஆசிரியரோ, செய்தி ஆசிரியரோ, துணை ஆசிரியரோ, எழுத்தாளர்களோ சுட்டிக் காட்டுவது அவசியம். ஏன் தெரியுமா? வாசகர்களது நினைவுக் குறிப்பை இவை வலிமைப்படுத்தும்; வளர்க்கும்; அவர்களது அறிவை வளமாக்கும்.

பத்திரிகையில் இதுவரை நாம் என்ன படித்தோம் என்ற கருத்துக்களைக் கண்ணாடியில் காட்டும் முகம் போல், படித்தக் கருத்துருவங்களை அக்குறிகள் எதிரொலித்துக் காட்டும். படிப்போர் அதனால் பயன் பெறுவர். படித்ததை மறுமுறையும் நினைத்துப் பார்ப்பர். ஆசிரியர்களிடம் அல்லது