பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

336

பத்திரிக்கை ஆசிரியராக தகுதிகள்; திறமைகள்!


நல்லனவற்றைப் பின்பற்றுவது அனுபவ மூட்டும் நலமாகச் சிறக்கும்.

அண்ணல் காந்தியடிகள் நடத்திய ‘ஹரிஜன்’ பத்திரிகை ஆங்கிலேயர்களைத் திணர வைத்தது அரசியல் செல்வாக்கோடு! அதனைப் போல, பத்திரிகை ஆசிரியர் தன்மானியாக நடமாடி, தலைநிமிர்ந்து நின்று எழுதினால், எந்த எதிரியும் பகையாகா இரான்! பத்திரிகை நலம் நாடும் நல்லவர்கள் யாரும் கேடுபாடுடையவராக ஆகார்! அத்தகையவர்கள் நட்புகளை ஆசிரியர் சிதற விடக்கூடாது; எந்த ஆபத்து வந்தாலும் அவர்கள் உடுக்கை இழந்த கைகள் போல் உதவ முன் வரலாம் அல்லவா?

எனவே, செல்வாக்குப் பெற்றுவிட்ட பத்திரிகை ஆசிரியரிடம் பொறுப்புணர்ச்சி, நாட்டுப்பற்று, மொழிப் பற்று, பணியுமாம் என்றும் பெருமை என்ற உணர்வு, அனைவரையும் மதிக்கும் மாண்புடைமை இருந்து விட்டால், அந்தப் பத்திரிகை அழியாது; ஆசிரியரையும் மக்கள் மறவார் என்பது உறுதி.