பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/345

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

343


எவ்வாறு அமைந்திருந்தால் சிறப்பாக இருக்கும்? இதோ அந்த நடைக்குரிய இலக்கணம்.

அகம்பாவ உணர்ச்சியை அடக்கிக் கொண்டு, வேகமாகப் பின்வாங்கி முன்னோடி வந்து மோதும் செம்மறி ஆட்டுக் கடாக்களைப் போன்ற மானம்; ரோஷம்; அந்தத் தமிழ் நடையில் செஞ்சொற்களால் அமைந்திருக்க வேண்டும்.

பின் சென்று சுருண்டு உருண்டு புரண்டோடி வரும் பொங்கு மாங்கடல் அலைகளைப் போன்ற ஜால வித்தைகள் அந்தத் தமிழ்நடையில் தாண்டவமாட வேண்டும்.

காண்டா மிருகம் தனது கொம்புகளால் தாக்கும் போதுள்ள வலிமை, எழுதும் கட்டுரையில் மறைந்திருந்தாலும், கலை மான் கொம்புகளது வளைவுகள் உண்டாக்கும் ரத்தக் கசிவுக் காயங்கள் போல; எதிரிகளின் சிந்தனைக் கருத்துக்களைச் சிதறடித்து, அதன் ‘கரு’ என்கிற கபால ஓட்டைக் கழற்றி எறியும் தமிழ் எழுத்துக்கள் கட்டுரையில் அலை மோத வேண்டும்.

வானத்தில் வளரிளம் பிறைகளது ஒரு முனைக் கூர்மை போல, கண்டனக் கட்டுரைச் சொற்கள் எதிரிகள் எண்ணங்கள் மீது கூர்மையாகப் பாய்ந்து மோத வேண்டும்.

அறிவு, கொப்பளிக்கும் கருத்துக்கள் எழுதுகோல் முனையில் பொங்கி வழிய வேண்டுமே தவிர, Horns of Dliemma அதாவது இருதலைக் கொள்ளி எறும்பு மயக்கம் நெஞ்சில் ஊர்ந்திடக் கூடாது. அதனால், அறிவுத் தோல்வி வந்தாலும் அதை ‘வேலான் பட்ட வேழ நடையுணர்வோடு’ சகித்துக் கொள்ளலாம்! ஏனென்றால், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் அல்லவா? அதனால்!

இவை போன்ற கட்டுரைச் சொற்களது உணர்ச்சிகள், சம்பவங்கள், அதற்கான சான்றுகள், ஆதார ஏடுகள் எல்லாம் எதிரியின் ஏறணைய நெஞ்சிலே பேரச்சத்தை, பயங்கரக் கிலியூட்டும் சினச் சீற்றத்தை உருவாக்கும்போது, கட்டுரையைப் படிக்கும் வாசகர் வட்டங்கள் எல்லாருமே வீரம் தவழும் வெங்களப் பாடல்களைப் பாடித் துள்ளுவார்கள். கட்டுரை எழுதுபவருடைய எழுதுகோலின் அற்புதங்களை