பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/349

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

347


வெளியிட்டால், அந்தப் பல்சுவை தேன் துளிகளைப் பருக வாசகர் தேனீக்கள்; பத்திரிகைப் பகுதி மலர்களை மலர வைத்து, நுகர்ந்து, தேனுறிஞ்சி, அடை நெய்து, பிற்கால உலகுக்கு வழங்கும் அறிவைப் பெறுவார்கள். கவிஞர் சுரதாவும், கவிஞர் கண்ணதாசனும் தங்களது கவிதை, உரைநடை இதழ்களில் இந்தப் பணிகளைச் செய்து வெற்றி பெற்றிட்ட வித்தகர்களாக விளங்கினர் என்பதைத் தமிழகம் அறியும்.

ஆன்மீகம்
செய்திகள்

ஆன்மீகக் கருத்துக்களைப் பத்திரிகையில் வெளியிடலாம். புற உலகில் தோன்றுவன எல்லாமே கருத்தளவே ஆகும் என்ற கொள்கையுடைய idealisticக்குகளாக இருக்கலாம். இலக்கியவாதிகள் குறிக்கோளை உயர்வாக நினைக்கின்ற idealize ஆக இருத்தல் சிறந்தது. மக்கள் ஆன்மீக உணர்வுகளைப் புரிந்து கொண்டு திருக்கோவில் விழாச் செய்திகளை வெளியிட்டு ஆன்மிகர்களை மகிழ்வுப்படுத்தலாம். அந்த வாசகர்களும் பத்திரிகை வளர்ச்சிக்கு ஆதரவாக நடமாடுவார்கள்.

தேசிய கவி பாரதியாருக்குப் பிறகு கவிதை வானம் வெளுத்து வந்தது. புரட்சிக் கவிஞராக விளங்கிய பாரதிதாசன் அதற்குச் செம்மையை ஏற்றிச் செவ்வான மாக்கினார். அவருடைய பாக்களின் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல், நமது உடலின் நாடி நரம்புகளிலே துள்ளலை, துடிப்பை, நெருப்பை, கந்தக வெடிப்பை, தென்றல் சுவை போன்ற, புதுப்புதுச் சிந்தனை இசைகளோடு பாடி வந்த பாவேந்தர் ‘பா’ நயங்களைப் பத்திரிகையிலே எழுதி, பாவேந்தர் கவிதா மண்டலத்தை வளர்க்கும் இளைய தலைமுறைகளை உருவாக்கலாம்.

பத்திரிகைத்
தொண்டு

படிப்பு, கல்வி, ஆராய்ச்சி, இலக்கிய உணர்ச்சிகளது வளர்ச்சிகள், ஆழ்நிலை ஆய்வுகள், ஏடாய்வுகள், கூராய்வுகள்,