பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

33



இந்த பித்தகோரஸ் கூறிய வானியல் கருத்தைத்தான் அவருக்குப் பின் 1540 - ஆண்டுகள் கழித்து வந்த நின்னலேயஸ் கோப்பர்னிக்கஸ் என்பவர் பித்தகோரஸ் கூறியதை உண்மை என்று உலகுக்கு மெய்ப்பித்தச் செய்திகள் உலகையே வியக்க வைத்தன.

ஈக்லிட் என்ற வேறொரு கணித வித்தகர், வடிவ கணிதத்தின் மூலங்கள் Elementary, Geometry அட்சர கணிதம் Algebra கணக்கீடு கணிதம் Arithmatic போன்ற கணித நூற்களை எழுதி கணித உலகுக்குரிய செய்திகளாக்கினார். அந்துச் செய்திகள் மாணவ, ஆசிரியர் கல்விப் பணிகளாக இன்றும் வாழ்கின்றன.

கி.மு. 287 முதல் 212 வரை வாழ்ந்த ஆர்க்கிமிடிஸ் Archimedes என்ற கிரேக்க அறிவியல் வித்தகர். ஆர்க்கிமிடிஸ் கோட்பாட்டையும், தண்ணீரில் மிதத்தல் விதியையும் கண்டுபிடித்து அப்போதைய உலக நாடுகளில் எல்லாம் புகழ் பெற்றிருந்தார்.

ஆர்க்கிமிடீஸ் நெம்புகோலின் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். ‘எனக்கு நிற்க ஓர் இடம் கொடுங்கள். நான் பூமியை நகர்த்திக் காட்டுகிறேன்’ என்று நெம்புகோல் தத்துவத்தைக் கேலி பேசியவர்கள் இடையே ஆவேசமாகப் பேசினார். அதைச் சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டினார் ஆர்க்கிமிடீஸ்.

ஜியோமதி கணிதத்தில் விந்தைகள் பல செய்து காட்டிய அவர், கோளங்கள், கூம்புகள் ஆகியவற்றின் வெட்டு முகங்களின் தன்மைகளை விளக்கிச் செய்துகாட்டியும் கால்குலசை (Calculus) கண்டுபிடித்து, நுண்கணித இயலுக்குப் பெருமை தேடிய அவரது அறிவுத் திறன்கள் கணித உலகுக்குரிய அன்றைய - இன்றைய செய்திகளாக உலகெங்கும் பரவின.

‘ஆர்க்கிமிடீஸ் சுருள்’ என்ற சுருள் வடிவத்தையும் நெம்புகோல் தத்துவத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளை வீசும் கருவிகளையும் கண்டுபிடித்த ஆர்க்கிமிடீஸை; ஒரு போர் வெறியன் தனது கைவாளால் அவரது கழுத்தை ஒரே வெட்டாக வெட்டித் துடிதுடிக்கச் சாகடித்த விவரம்: அன்றைய