பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!




உடலில் அதிகமாக இருக்கும் திரவங்களின் வெளியேற்றமும், அந்தத் திரவங்களினால் உண்டாகும் நோய்களைக் குணப்படுத்த; தோலில் துளையிடும் முறைக்கு சீனர்கள் அக்குபஞ்சர் மருத்துவம் என்று பெயரிட்டு, அதை மனித உடலில் 22 இடங்களில் அக்குபஞ்சர் முறையைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவதுதான் அக்குபஞ்சர் - என்ற விளக்கச் செய்தியை சீன மக்களிடம் வாங்ஷிடோ என்ற நாடித் துடிப்பு மருத்துவர் விளம்பரப்படுத்தினார்.

சீனர்களின் பேரரசு செங்வாங் Cheng Wang என்பவர் கி.மு. 1115 ஆம் ஆண்டு முதல் 1075 வரை வாழ்ந்தவர். இவர் காலத்தில் வாழ்ந்த செள Chow என்பவர்தான் காந்த சக்தி கொண்ட திசை காட்டும் கருவியை முதன் முதல் கண்டுபிடித்த செய்தியை உலகுக்கு கூறினார் என்ற சங்ஷு Sung - Shu என்ற நூல் அறிவித்துள்ளது.

கி.மு. 752ம் ஆண்டில் சங்-சாங் என்ற கணித வல்லுநர், அல்ஜீப்ரா, ஜாமெட்ரி என்ற நூல்களை எழுதி, அதே நூற்களில் நெகட்டிவ் குவாண்டிட்டியை பற்றி போதித்த செய்தி, சீன மக்களிடையே கணக்கியல் புதுமைகளைப் பரவ வழி வகுத்தது.

அதே காலத்தில் சூசங்வி Chung Chih என்ற கணித நிபுணர்; ‘பை’யின்‘ரி’ என்ற சரியான மதிப்பீட்டை ஆறு தசம பின்னத்தில் வரையறை செய்து காட்டிய செய்தி; சீனக் கல்வி மையங்களிடையே பெரிதும் பாராட்டுப் பெற்றது.

சீன நாட்டில் கி.மு. 551 - முதல் 479 - வரை வாழ்ந்த கன்ஃபியூசியஸ் Confucius, கன்ஃபியூசியனிசம் Six Decimals என்ற தனது தத்துவத்தை மக்களிடையே ஊரூராகச் சென்று போதித்து, அன்பு என்றால் என்ன என்பதை விளக்கி உரைத்தச் செய்தி உலகம் முழுவதும் பரவியது. காலந்தவறாமை என்ற அவரது கொள்கையை மக்களிடையே அவர் செய்தியாக உபதேசித்தார். அவரது மாணவர்கள் கன்ஃபியூசியஸ் தத்துவத்தைச் செய்திகளாக்கி அதை நாடு முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.