பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

5


நாடகங்களின் புகழையும் மீறிக் கட்டுரைகள் மூலமாக எழுதிப் புகழ் பெற்றார்.

1903-ம் ஆண்டில் அவர் தனது வன்மையான கட்டுரை, கவிதை எழுத்துக்களால், நார்வே நாட்டு மக்கள் இடையே பெற்ற அரும் செல்வாக்குக்காக நோபல் பரிசு பெற்ற பத்திரிகையாளராக ஆனார். 26.4.1910ஆம் ஆண்டில் அந்த எழுத்துலக மேதை மரணமடைந்தார்.

அமெரிக்கா
‘சிகாகோ சன்’

அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ என்ற நகரிலிருந்து எரிக்பியர்சன் என்பவர் ‘சிகாகோ சன்’ என்ற வாரப் பத்திரிகையைத் துவக்கினார்.

அந்தப் பத்திரிகை, அமெரிக்க அரசின் மீது மக்கள் சாட்டிய வதந்திகளை எதிர்த்து, ‘புரட்சி’ என்ற பெயரில் தொடர் கட்டுரைகளை 22.10.1906ம் ஆண்டு முதல் எழுதி வந்தார்.

எரிக்பியர்சன் கட்டுரைகள் சிகாகோ மக்களையே திணறடித்தது. மக்களிடையே பரவும் வதந்திகளைக் கண்டிக்கும் சீர்த்திருத்தவாதி என்ற பெயரை அவர் பெற்றார்.

நியூயார்க்
“டிராமடிக் மிரர்”

அமெரிக்காவிலே இருந்து நியூயார்க் ‘டிராமடிக் மிரர்’ என்ற ஏடு ஒருவரால் நடத்தப்பட்டது. அந்த வாரப் பத்திரிகைக்கு அதிக செல்வாக்கு ஏற்பட்டதால், மாட்ரீட் நகரத்தில் மட்டும் 17 ஆயிரம் பேர் சந்தாதாரர்களாக இருந்தார்கள். நோபல் பரிசு பெற்ற ஜோஸ் எச்சகார் அந்தப் பத்திரிகையில் தொடர் விமர்சனம் எழுதிப் புகழ் பெற்றார்.

‘பிராவங்கல்
களஞ்சியம்’

பிரான்ஸ் நாட்டில் 1854ம் ஆண்டில் புகழ் பெற்ற கவிஞராக இருந்த பிரடெரிக் மிஸ்ட்ரால் என்பவர் ‘பிராவங்கல்