பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


 எடின்பரோ, டர்ஹாம் பல்கலைக் கழகங்களும் பாராட்டுதல்களை வழங்கி, பல பட்டமளிப்புக்களை ஈந்தன. பாரீஸ், ஏதென்ஸ், டொராண்டோ போன்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களும் கிப்ளிங் எழுத்துப் புரட்சியை வரவேற்றுப் பாராட்டிப் பட்டமளித்தன்.

உலகப் புகழின் சிகரத்தின் மேல் வீற்றிருந்த ரூட் யார்டு கிப்ளிங் என்ற பத்திரிகை எழுத்தாளருக்கு, சிறுவர் சிறுகதை ஆசிரியருக்கு 1907ம் ஆண்டில் நோபல் பரிசு கிடைத்தது.

பத்திரிகையாளர் உலகில் நீண்ட நெடுங்காலம் புகழுடன் வாழ்ந்த கிப்ளிங், 1936ம் ஆண்டில் மரணமடைந்தார்.

ஸ்வீடிஷ் பெண்
பத்திரிகை எழுத்தாளர்

செல்மா லாகர் லஃப் என்ற பெண் எழுத்தாளி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை. இவர் 1858ம் ஆண்டு வார்ம்லாந்து என்ற மாநிலத்தில் பிறந்த ஓர் இராணுவ அதிகாரியின் மகள்.

செல்மா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே, ஸ்வீடன் நாட்டிலே இருந்து வெளிவந்த ‘ஐ தூன்’ என்ற பத்திரிகையில் ஓராண்டு விடுப்பு எடுத்துக் கொண்டு தொடர் கதைப் பகுதி ஆசிரியராக இருந்தார். கோஸ்ட்டா பெர்லிங் சாகா என்ற அந்த தொடர் கதை புத்தகமாக வெளி வந்தது. அதைப் படித்த டேனிஷ் பத்திரிகை ஒன்றின் விமர்சகராக இருந்த ஜார்ஜ் பிராண்டிஸ் என்பவர் காதல் இயக்கத்தின் அற்புதப் படைப்பு அதாவது Romantic Movement என்று பாராட்டி மதிப்புரை எழுதினார். அந்த முதல் நாவல் உலகப் புகழ் பெற்று விட்டது.

செல்மாவின் எண்ணற்ற அற்புதப் படைப்பு இலக்கியங்களுக்காக, 1909ம் ஆண்டில் அவர் நோபல் பரிசு பெற்றார்.

பெல்ஜியம்
பத்திரிகையாளர் :

பெல்ஜியம் என்ற நாட்டின் புகழ் பெற்ற இலக்கிய வித்தகராக விளங்கியவர் மாரிஸ் மேட்டர் லினிஸ் Maurice Maeter