பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

63


என்ற பெருமையையும் பெற்றார். தொடர்ந்து அவர் அமெரிக்க, சீன பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை, பயண நூல்களை எழுதி வந்தார்.

டென்மார்க் நிருபர்
ஜோஹனஸ் ஜென்சன்

டென்மார்க் நாட்டில் புகழ் பெற்ற விஞ்ஞானியின் மகனான ஜோஹனஸ் ஜென்சன் 20.1.1873-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டிலுள்ள வடக்கு ஜத்லாந்தைச் சேர்ந்த ஹிம்மர்லாந்து என்ற நகரில் பிறந்து, 1893ல் கோபன்ஹேகன் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.

சிறுவயதிலேயே அவர், எமிலிஜோலா, சேக்ஸ்பியர், நட்ஹாம்சன், ரூட் யார்டு கிப்லிங் நூல்களைப் படித்துத் தனது அறிவை வளமாக்கிக் கொண்டார்.

‘பொலிட்டிகன்’ Politiken என்ற டேனிஷ் செய்தித் தாளில் ஜென்சன் நிருபராகச் சேர்ந்து, ஸ்பானிஷ் அமெரிக்கா போர்ச் செய்திகளைத் திரட்டிப் பத்திரிகைக்கு அனுப்பி வந்தார்.

‘மன்னரின் வீழ்ச்சி’ என்ற பெயரில் ஜென்சன் எழுதிய இரண்டாம் கிறிஸ்டியன் என்ற டேனிஷ் மன்னனின் வரலாற்றை மிக அற்புதமாக எழுதினாா. அந்த நூல் உலக இலக்கியவாதிகளின் பாராட்டுதல்களைப் பெற்றது.

1912-ஆம் ஆண்டில் ஜென்சன் மீண்டும் ஒரு உலகச் சுற்றுப் பயணம் செய்ததை , introduction to our Epoch என்ற பெயரில் ஒரு பயண நூலாக வெளியிட்டார். இந்த வகைப் பயண நூற்கள் அவரால் ஆறு தொகுதிகள் வெளி வந்தன. இந்த நூற்களில் அவரது புதிய சிந்தனைகளின் முத்திரைகள் உலகப் புகழைப் பெற்றன.

சுருங்கக் கூறுவதனால், ஒரு பத்திரிகை நிருபராகப் பணியாற்றிய அவரது புதிய சிந்தனை முயற்சிகள், உலகத்தில் ஜென்சன் ஒப்பற்ற ஓர் இலக்கியத் திறனாளர் என்பதை நிரூபித்ததற்காக 1944-ஆம் ஆண்டில் நோபல் பரிசு நிறுவனம்