பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு அந்த நாவலை எழுதினார். அதனால், அதை, உலகம் வியந்து பாராட்டி மதித்தது. இதே அடிப்படையில் ஹெமிங்வே பல நாவல்களை எழுதினார்.

போர்க் காலத்தில் நடைபெறும் ஒற்றாடல்களை அடிப்படையாக வைத்து அவர் ஸ்பெயின் நாட்டிலிருந்தபோது “The fifth colum” வேவுத் தொழில் என்ற பெயரில் ஒரு நாடகத்தை எழுதினார்.

அந்த நாடகத்தில் உள்நாட்டுப் போரின் காதல் நிகழ்ச்சிகளையும், வன்முறைச் சம்பவங்களையும், புகுத்தி எழுதியிருப்பதைப் பார்த்த உலக இலக்கியவாதிகள் அவரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

வெற்றிகரமான பல போர்க் கள நிகழ்ச்சிகளை இலக்கியமாக்கிய எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் பாராட்டி நோபல் நிறுவனம் நோபல் பரிசை வழங்கியது.

அல்ஜீரியா
பத்திரிகையாளர்

ஆல்பர்ட் காமு என்ற பத்திரிகையாளர் 7.11.93-ஆம் ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் பிறந்தார். அல்ஜியர்ஸ் பள்ளிகளில் கல்வியை முடித்த காமு, அந்நாட்டுப் பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை பட்டம் பெற்றார்.

ஆல்பர்ட் காமூ, 1937-ஆம் ஆண்டில் ‘இடையிடையே’ (Between and Between) என்ற கட்டுரை நூலை எழுதினார். அதற்குப் பின் ‘மகிழ்ச்சியான மரணம்’ ‘A Happy Death’ என்ற நாவலை எழுதினார். இந்த இரு நூல்களும் காமூவுக்கு அல்ஜீரியா முழுவதும் நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

‘அல்ஜீர் ரிபப்ளிக்கன்’ ‘Alger Republican’ என்ற செய்தித்தாளில் காமூ ஆசிரியர் பணியை ஏற்றார். இதற்குள் இரண்டாம் உலகப் போர் துவங்கவே, காமூ, 1938-ஆம் ஆண்டில் ஃபிரான்ஸ் நாட்டிற்குச் சென்று நிரந்தரமாகத் தங்கி விட்டார்.