பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

73



மார்க்கெசின் சிறுகதைகளில் கிராமிய நிகழ்ச்சிகள் உயிரோட்டமாக இடம் பெற்றிருந்ததால், இலக்கிய வட்டாரத்தில் பெரும் புகழ் பெற்றார். அவருடைய கதைகளில் புதிய கண்ணோட்டமும், கதை கூறும் வித்தியாசப் போக்கும், புதுமையான ஒரு கிராமிய அணுகுமுறையும் காணப்பட்டதாலும், கதைப் பாத்திரங்களில் மாறுபட்ட மனித உணர்ச்சிக் குணங்கள் இருந்ததாலும், அவருடைய சிறுகதைகளுக்கு அமெரிக்காவிலும் உலக இலக்கிய வட்டங்களிலும் வரவேற்பு அதிகமாக இருந்தது.

மார்க்ஸ் ஏராளமான சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியதால், அவர் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரானார். அவர் எழுதிய ‘தனிமையில் நூறு ஆண்டுகள்’ என்ற நாவல் 1982-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைப் பெற்றது.

பத்திரிகை வாழ்க்கையே தனது உயிர் வாழ்க்கை என்று நம்பி அரும்பாடுபட்ட கார்சிய மார்க்கெஸ், தனது ஏழ்மையையே தகர்த்தெறிந்த பத்திரிகையாளர் ஆனார். ஆனால் : நோபல் பரிசையும் ஓர் ஏழையால் பெற முடியும் என்பதை நிரூபித்த பத்திரிகை எழுத்தாளராகவும் அவர் மதிக்கப்பட்டார்.

அமெரிக்க பத்திரிகையாளர்
பெஞ்சமின் ஃபிராங்க்லின்

மெழுகுவர்த்தி, சோப்பு செய்யும் ஜோசய்யா பிராங்க்லின் மகனாக, ஓர் ஏழைக் குடும்பத்தில் 1706-ஆம் ஆண்டில் பிறந்தவர் பெஞ்சமின் ஃபிராங்க்லின். அவர் 84 ஆண்டுகள் வாழ்ந்த தனது வாழ்நாளில் பல அற்புதங்களைச் செய்து காட்டி அனைத்திலும் வெற்றி பெற்றிட்ட ஒரு பத்திரிகையாளர் வழிகாட்டி ஆவார்.

பெஞ்சமின், இந்திய விடுதலையின் தந்தையான காந்தியடிகளைப் போல, சீன நாட்டு சன்யாட்சனின் சீர்திருத்த வேட்கைக்கு ஒப்ப; டாக்டர் ஜான்சனுடைய நடுநிலை துலாக்கோலுக்கு ஈடாக, டால்ஸ்டாயின் அன்பு ஊற்றுக்கண் பெருக்காக