பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


கூறுவனவாக மாறிவிட்டன” என்று; இந்திய இதழ்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதன் உண்மைக் கருத்தின் கரு வளர்ச்சிகளை இதே தலைப்புப் பகுதியிலேயே படிக்கப் படிக்க உணர முடியும்.

இந்திய இதழியலுக்கு முன்னோடிக் குறிப்புகளாகக் காணப்படுபவை; சாம்ராட் அசோகரின் கல்வெட்டுகளும் - அவரது ஆட்சியால் மக்களுக்குக் கிடைத்தச் செய்திகளின் நன்மைகளும் ஆகும்.

புத்த சமயம் இந்தியாவிற்கு மிகச் சிறந்த நீதிநெறி முறைகளை வழங்கியது என்பதை நெஞ்சார உணர்ந்த மாமன்னர் அசோகர் - அவரது ஆட்சியில், அன்பு, அரவணைப்பு, உயிர் வாழும் இனங்களுக்கு மனத்தால், எண்ணத்தால், செயலால் தீங்கு செய்யாமை போன்ற சிறப்புத் தன்மைகளைக் கடைப்பிடித்தார் என்பதே சிறப்புச் செய்திகள்.

வேளைதோறும் உணவுக்காக வெட்டப்பட்டுச் சமைக்கப்பட்ட எண்ணற்ற மயில் கறி உணவை உண்ணுவதை அவர் அடியோடு நிறுத்தி, உயிரீனும் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொண்டார். அதனால், அவரது அரண்மனையே சைவ உணவை உண்டு வந்தது.

பேரரசர் அசோகர், பொறுமை, கனிவு, சகிப்புத் தன்மை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக், கலிங்கப் போருக்குப் பிறகு தன்னையே மாற்றிக் கொண்டார். அவரது முரட்டுத் தனத்தை அழித்துக் கொண்டு பொறுமை என்ற தத்துவத்துக்கு அணிகலனானார் சகிப்புத் தன்மைக்குச் சான்றாளரானார். இந்த் இரண்டு அரிய பண்புகளும் இந்தியச் சமுதாயத்திற்கே அவர் ஆட்சியில் புத்துயிர் புகுத்தின. அவையே இன்றைய இந்தியாவின் வெளி உறவுக் கொள்கைச் செய்தியாக உலகில் பவனி வருகிறது.

அசோகர் வழியைப் பின்பற்றியே தற்காலத்தில் சாலை ஓர மர நிழல்கள் பணி, ஓய்வு விடுதிகள் அமைத்தல், கால்நடைகள் முதல் மக்கள் வரை உருவாகும் பிணி நீக்கும் மனைகள், மருத்துவ மூலிகை வளர்ச்சிகட்கு தரும் மானியத்தொகை: கடவுளுக்காக விலங்குகளை பலியிடும் கொள்கை