பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

87


முன்பைவிடக் கடுமையாகத் தாக்கித் தனது பத்திரிகையில் எழுதினார்.

விடுமா இங்லீஷ் கம்பெனி அரசு? பத்திரிகை ஆசிரியர் ஹறிக்கியைக் கைது செய்யும் ஆணையுடன் நானூறு காவலர்கள் கொண்ட ஆயுதப் படை சென்றது. சும்மா இருப்பாரா அந்த இங்லீஷ்கார ‘ஆணவி’களை எதிர்க்கும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர்?

அச்சகத்துள் நுழைந்த அந்த இங்லீஷ் காவலர்களை ஹிக்கி கடுமையாகத் தாக்கினார். அச்சக இரும்புக் கருவிகளை, இயந்திர சாமான்களை வீசி எறிந்து கண்டபடி அவர்களைக் காயப்படுத்தினார். அவரைக் கைதியாகச் சிறைப்பிடிக்க முடியாமல், அந்தப் படை திரும்பி விட்டது. ஆனால், ஹிக்கி, தான் ஒரு பத்திரிகை ஆசிரியன் என்ற தன்மானத்தோடும் மரியாதையைக் காக்கும் எண்ணத்தோடும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முன்பு நின்றுவிட்டார்.

நீதிமன்றம் ஹிக்கிக்கு ஓராயிரம் ரூபாயைப் பிணைத் தொகையாகக் கட்ட உத்தரவிட்டது. பத்திரிகை ஆசிரியனால், அதுவும் ஆட்சியை எதிர்க்கும் ஒரு பத்திரியாளரால் எப்படிக் கட்ட முடியும்? ஹிக்கி காரக்கிரகத்துள் தள்ளப்பட்டார். தான் ஒரு பத்திரிகையாளன் என்ற சுயமரியாதையை அவர் நிலை நாட்டினார்! இருந்தும் தட்டத் தட்ட உயரே பந்து எழுவதைப் போல, இந்தப் பத்திரிகை விரோதிகளுக்காக அவர் பயப்படாமல் சிறை உள்ளே இருந்தவாறே தனது ‘வங்காளக் கெசட்’ இதழை நடத்தி வந்தார்.

தண்டனை பெற்று விட்டதற்காக, ஹிக்கி அஞ்சவில்லை. முன்பைவிட மிகக் கடுமையான நடையில் ஆட்சிப் போக்கை எதிர்த்து எழுதினார். அவரது பத்திரிகை வழக்கை விசாரித்த நீதிபதி அவரது ஒரு குற்றத்துக்காக மட்டும் ஓராண்டு சிறை தண்டனை—; இருநூறு ரூபாய் அபராதம் என்றார்.

அடுத்து தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் ஹிக்க பத்திரிகை மீது தொடுத்த வழக்கிற்காக, 5000 ரூபாய் இழப்பீட்டுத் தொகை கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தார் - அதே நீதிபதி. ஹிக்கி தனது வழக்கை மறு விசாரணைக்கு