பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/92

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!


சர்க்கரை ஆகிவிடக் கூடாது. வெறும் சர்க்கரை உடம்புக்கு நல்லதல்ல. வெறும் இந்திரிய ரஞ்சகமான சமாச்சாரங்களில்தான் ஜனங்களுக்கு அதிகக் கவர்ச்சி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அவ்விதமே எழுதுவது சரியல்ல”

“ஜனங்களுக்கு ஆத்மாபிவிருத்தி தருகிற முறையில் எழுதுவதற்கு எழுத்தாளர்கள் முனைந்தால், தானாகவே ஜனங்களுக்கு ருசி பிறக்கும்; நம்மையும் உயர்த்திக் கொண்டு நம் வாசகர்களையும் நாம் உயர்த்த வேண்டும்” என்கிற கடமை உணர்ச்சியைப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் பெற வேண்டும்”

“இவ்விதம் ஆத்ம க்ஷேமம், லோக க்ஷேமம், சாந்தி, சுபிட்சம் எல்லாவற்றுக்கும் மெய்யான சேவை செய்கிற பாக்கியத்தைப் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் பெற வேண்டும்” என்று: ‘தெய்வத்தின் குரல்’ முதல் தொகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, கிழக்கு இந்தியக் கம்பெனி வர்த்தகத்தில் நடந்த ஊழல்களையும், ஹேஸ்டிங்ஸ் குடும்ப விவகார உறவியல் ஈனங்களை அவர் அம்பலப்படுத்தியதையும், அரசு அதிகாரிகள் அனைவரும் எதிர்த்ததைக் கண்ட கம்பெனி ஊழியர்களில் சிலர், அரசு ஆதரவுடன் அவர்களது அனுமதியைப் பெற்று ‘இந்தியா கெசட்’ (India Gazette) என்ற பத்திரிகையை அதே 1780-ஆம் ஆண்டே துவக்கினார்கள். அவர்களுக்கு ஹேஸ்டிங்ஸ் அரசு அஞ்சலக சலுகையை அளித்தது. இதைக் கண்ட ஹிக்கி, அரசின் பாரபட்சப் பத்திரிகைப் போக்கை எதிர்த்து எழுத்துப் போரிட்டார். என்ன பயன்? பாவம்தான் மிச்சம்!

ஹிக்கிக்குப் பிறகு 1784-ஆம் ஆண்டில் ‘கல்கத்தா கெசட்’, ‘வங்காள ஜெர்னல்’, ஓரியண்டல் மேகசின்’ அல்லது ‘கல்கத்தா அம்யூஸ்மெண்ட்’ என்ற பத்திரிகைகள் அடுத்தடுத்து வெளிவந்து ஹேஸ்டிங்ஸ் பிரபுவுக்கு ஜால்ரா தட்டிக் கொண்டே நடந்தன. இந்த மூன்றுக்கும் துணையாக ‘கல்கத்தா கிராணிக்கல்’(Calcutta Chronicle) என்ற பத்திரிகை 1786ல் வெளி வந்து ஓங்காரமாக தாள ஓலமிட்டது.