பக்கம்:இதழ்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

101

இதழ்கள் 10 |

நெஞ்சீரல் என்றுதான் போகுமோ? அம்மா ஏன்தான் இப் படிப் பேசிண்டிருந்தால்தான் பிள்ளையை அத்தில் வைத்துக் கொண்டிருப்பதாய் எண்ணமோ? என் பிழைப்பு இப்படி ஏன் ஆக வேண்டுமோ? ஆபீஸுக்குப் போனால் வீட்டுக் கவலை; வீட்டுக்கு வந்தால் ஆபீஸ் கவலை. ஜன்மம் எடுத்ததே கவலைக்குத்தான். போதாக் குறைக்கு ஒண்ணாச்சு, இப்போ ரெண்டும் ஆகப்போறது. எப்போத்தான் நிம்மதி? குழந்தை கள் பாடு நிம்மதிங்கறோம். அதுகளும்தான் எங்கே நிம்மதியா இருக்கின்றன? இதோ பாரேன்; பாபு முகத்தில் கோடி துயரங்கள்: பாபுவை எப்பவுமே அவனால் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. அவர்களிடையில் நெருக்கம் இல்லை, பாபு அம்மா பிள்ளை, பிறந்தது முதல் ஏதாவது வியாதி பிடுங்கிக் கொண்டு...நோஞ்சா'னாய் அடுக்கடுக்காய் அலமாரி நிறைய பாட்டில் பாட்டிலாய் வாங்கிக் கொடுத்திருக்கும் மருந்து களும் டானிக்கும், சாறாய்ப் பிழிஞ்சு உள்ளேயிறக்கும் வண்டிச் சாத்துக்கொடி பழங்களின் சத்தும் எங்கேதான் போறதே? "ஹ"ம் ஹும் என்று சதா சர்வகாலமும் சிணுங்கிக்கொண்டே அவன் தாயோடேயே அட்டையாய் ஒட்டிக் கொண்டிருப்பான். அவள் மடிஜலம் பிடிக்கக் குழாயடிக்குப் போனாலும் சரி. கூடைக்காரியிடம் கரு வேப்பிலை வாங்க வாசலுக்குப் போனாலும் சரி, காக்கைக்குச் சாதம் போடப் போனாலும் சரி, சமையலறையில் என்ன வேலையா யிருந்தாலும் சரி, புடவைத் தலைப்பை விடாது பிடித்துக்கொண்டே யிருப்பான். உஹாம் உஹசம்' எனும் அந்த ஓயாத சிணுங்கல் சகிக்க முடியவில்லை. அது அவனைக் குடைந்து தின்று ஒரு வேலையிலும் மனம் நிலைக்க முடியாமல் அடித்தது. அவனுக்கு அவன் பிள்ளைமேல் சிறு கரிப்புக்கூட ஏற்பட்டது. ஆனால் பாகி எப்படித்தான் சகிக் கிறாளோ தெரியவில்லை. இப்பவும்தான் பாரேன்! அவன் கேக்கற கேள்விக்கெல்லாம் முகம்கூடக் கோணாமல் அவளால் எப்படிப் பதில் சொல்ல முடியறது; அவா ரெண்டு பேருக்குமே இப்போ மற்றவர்களின் சிந்தனை இருக்கோ என்பதே சந்தே கம். ஜட்கா வண்டியின் கட்டைகளினிடையில் குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/101&oldid=1247199" இலிருந்து மீள்விக்கப்பட்டது