பக்கம்:இதழ்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இதழ்கள்

1 1s. இதழ்கள் முடியாம தூக்கிண்டு, புஸ் புஸ்ன்னு கொல்லன் பட்றை துருத்தி மாதிரி மூச்சு விட்டுண்டு என்னை விரட்டிண்டு வராட்டால்தான் என்ன? மார்க்கபமோ சதங்கையாய்க் குலுங்குகிறது. என் மேலே பரிவுதானம் என்ன தட்டுக் கெட்டுப் போச்சு? நான் கூப்பிடறேன், நீ வரவில்லையா என்கிற ஹடம்தானே!-- அவசர அவசரமாய் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்கை யிலேயே அறைக்கதவு படீரெனத் திறந்தது. நிலை வாசல் மேல் சாய்ந்தபடி மாமியார் நின்றார். ஏறிவந்த சிரம்ம் தாளவில்லை. மூச்சு இரைத்தது. பார்க்கவி எழ முயன்றாள். தள்ளிவிட்டது. வந்தது வரட்டும், நான் இருக்கறபடிதான் இருக்கப் போறேன் என்றெல்லாம் தனக்குள் வீராப்பு எண்ணலாமே தவிர, நேரில் காண்கையில் நெஞ்சு அப்படியே சுருங்கி விடறது! ஏனோ தெரியல்லே. பார்க்கவிக்குத் தன் ம்ேலேயே கொள்ளை ஆத்திரம் வந்தது. அம்மாவின் தோற்றத்திற்கே பிறரை வாயடைக்கும் ஒரு ப்ரஸ்ன்னம் இருந்தது. தூண்மேல் சாய்ந்து ஒரு காலை நீட்டி உட்கார்ந்தபடி தயிரைக் கடைந்து கொண்டே, என்னடா சொல்ல வரே, ம்ா விளக்கு மா திங்கற மாதிரி வாயைக் குதப்பிண்டு?’ என்று கேட்டதுதான் தாமதம், "ஒண்னுமில்லேம்மா' என்று அவள் கணவன் அவசரமாய் வெளியே போய்விடுவான். ஒரு நாளா, இரண்டு நாளா? இம்மாதிரி, அவளுக்கு நினைவு தெரிஞ்சு இந்த அஞ்சு வருஷமா இரும்புக் கோலால் ஆண்டு ஆண்டு, ஈரமும் நயமும் இந்த வீட்டில் வறண்டு போய் முதலுக்கே மோசமா ஆயிடுத்து. சேசே இப்போ அவசரம் என்ன? படுத்திண்டிரு. இன்னும் பொழுது விடியல்லே, சூரியன் புறப்பட்டு ஒரு மணி நேரம்தான் ஆறது-’ 'இல்லேம்மா, விடிவேளையிலே கண்ணை அசத் திடுத்து- எழவொட்டாமல் அவள் உடல் மறுபடியும் அவளைக் கீழே தள்ளிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/110&oldid=1247208" இலிருந்து மீள்விக்கப்பட்டது