பக்கம்:இதழ்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இதழ்கள்

j i 6 இதழ்கள் வெடுக்கென ஒரு இதழைப் பிய்த்தெறிந்தார். அது காற்றில் கழன்று சுழன்று சென்றது. "உன் அம்கா இருந்த வரைக்கும் ஏதோ லக்ஷ்மி மாதிரி விருந்தாள். அவன் இருந்த வரைக்கும் எனக்கும் எல்லாம் சரியாய்ந்தா னிருந்தது. அவள் போனாள். நீ வந்தாய். புடிச்சு தய்யா எனக்கும் சனியன்! என் ஆஸ்தியெல்லாம் நாஸ்தி 4:ாச்சு.” இன்னொரு இதழ் காற்றில் பறந்தது. மூன்று இதழ் களுடன் மூளியாய் அவர் விரல்களிடை திரியும் பூவைப் பார்க்கவே அவளுக்குப் பயமா யிருந்தது. அவர் அவளைப் பார்க்கவில்லை. அவர் தன்னோடு பேசிக்கொண்டிருந்தார். இல்லை. தன் கைப்பூவோடு பேசிக் கொண்டிருந்தார். இதுதான் பூவின் பாஷையோ? -

  • உனக்கு முன் பிறப்பு எனக்கு ரெண்டு பெண்கள் உண்டு. இருந்த மாடு, மனை, வீடு, சொத்து எல்லாம் விற்று, கடனும்பட்டு, அவர்களைக் கட்டிக்கொடுத்து, அவரவர் விட்டுக்கு அவர்களை ஒட்டியும் விட்டேன். அன்னியிலிருந்து அவர்கள் என்ன வானார்கள், இருக்காளா செத்தாளா என்று இன்னமும் தெரியாது. அவர்களைப் பார்த்து உனக்கு வவலா கிற வருஷம் ஆகிறது

இதழ்களைப் பிய்த்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஊதினார். இரண்டும் இரண்டு திக்காய்ப் பிரிந்து மிதந்து மறைந்தன. இன்னும் ஒரு இதழ் குற்றுயிராய்க் காம்பில் ஒட்டிக் கொண்டு காற்றில் அலைந்து தவித்தது. “லகி.மி இருந்த வரைக்கும் ஒரு தம்ளர் ஜலத்தை இடம் விட்டு இடம் நான் நகர்த்தினதில்லை. ஆனால் உனக்கு நான் தாயாகவே இருந்திருக்கிறேன். நீ பச்சைக் குழந்தை பாய் இருக்கையில் உன்னை என் முழங்காலில் குப்புறப் போட்டுக் குளிப்பாட்டி யிருக்கிறேன். கடைவாயில் பாலா டையை அமுக்கிவைத்துப் பாலும் எண்ணெயும் கஞ்சியும் கஷாயமும் நானே புகட்டியிருக்கிறேன். இப்போ இங்கே நீயும் நானும் உட்கார்ந்து கொண்டு இதெல்லாம் எப்.டி.டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/116&oldid=1247214" இலிருந்து மீள்விக்கப்பட்டது