பக்கம்:இதழ்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

119

இதழ்கள் tig

போனவர், போனார் போனார் போனாரே!...பேச்சு சுவாரஸ் யத்தில் திரும்பியே வரல்லே. (அதென்னதான் அப்படி ஒரு பேச்சு இருக்குமோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிண்டு கேக்கறவாளுக்கு அலுத்துப் போகும்படி...அனா தான் அப்புறம் அவள் கிட்டவந்து சொல்லிடறாளே. கடுகோ, பருப்போ கடன் வாங்கப் போறாப் போலே கரண்டியை வீசிண்டுவந்து. அம்மா உத்தரவு இல்லாமல் அவள் ஒரு உப்புக்கல்கூடக் கடன்கொடுக்க முடியாதுன்னு அவாளுக்கே தெரியும்-அவர்கள் எதிரிலேயே அவள் எவ்வனவு அவஸ்தைப் பட்டிருக்கிறாள்! போகட்டும் போகட்டும்; அப்யாகுடி அப்பன்குடி அவளுது என்ன தட்டுக் கெட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் போறவேளை வந்துடுத்து.) கலத்தில் சாதத்தை வைத்துக்கொண்டு அப்போதுதான் ஒரு கவளத்தை வாயில் போட்டாள். வெறும் வயிற்றில் விழுத் ததும் விக்கல் கண்டுவிட்டது. அதைச் சமாளிக்கத் தீர்த் தத்தை முழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா வந்துவிட்டார். கலத்தில் சோற்றை வெச்சுண்டா காசிக்குப்போன கணவன் கூட வந்துவிடுவான் என்கிற வசனம் வீணாய்ப் போகவா ஏற்படுத்தியிருக்கா? பேஷ் பேஷ் ஒஹோ, பசிக்கிறதோ? பொம்மனாட்டிக்கு அப்படி ஒரு பசியா? சரி இனிமேல் எனக்கு எவ்வளவு மரி யாதை கிடைக்கும்னு தெரிஞ்சுண்டேன். என் கையள்ளு அரிசியை நானே தனியாக் களைஞ்சு வெச்சுக்க வேண்டியது தான். இந்தாத்து ராஜகுமாரன் அந்த ஊர் ராஜகுமாரியைத் தேடிப் புடிச்சுண்டு வந்துட்டானோன்னோ, கதையும் நாவலும் நடத்தி வீட்டுக்கு வந்ததும் ராஜகுமாரி ராணி யம்மாளாயிட்டா, அப்புறம் இந்தக் கிழம் கட்டைக்கெல்லாம் பேசறதுக்கு என்ன இருக்கு? வேனும் வேணும், எனக்கு நன்னா வேனும்; இதுக்கு மேலேயும் வேனும்!” தட்டுச் சோறும் அப்படியே விஷமாய் மாறிவிட்டது. முழுங்கி முழுங்கிப் பார்த்தும் உள்ளே செல்ல மறுத்து விட்டது. வாசலிலே கொட்டும்படியே ஆகிவிட்டது. அதற்கு வேறே தனி வசவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/119&oldid=1247217" இலிருந்து மீள்விக்கப்பட்டது