பக்கம்:இதழ்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இதழ்கள்

#50 இதழ்கள் எவ்வளவோ எதிர்பார்க்கிறோம். எதிர்பார்த்ததுக்கு எல்லையே கிடையாது. ஆனால் இருப்பதுதான் கிடைக்கும். இருக்கிற வரையில்தான் கிடைக்கும். எதை எதிர்பார்க்கிறோம் என்று கூடத் தெரியவில்லை அதனாலேயே புரியாமலே எங்களிடையில் நேரும் தர்க்கங் களும் சச்சரவுகளும் நேர்ந்து, அவள் கண்ணிர் விட்டுக் கொண்டு சுவரோரம் படுத்துக்கொண்டிருக்க நான் இன்னொரு சுவரை முறைத்துக் கொண்டிருக்க, நிஜமாகச் சண்டை எதற்காக ஆரம்பித்தது என்றுகூடப் புரியாமல் திகைப்பா யிருக்கும். உலகத்தில் நேரும் எல்லாச் சண்டைகளுமே அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கும் சண்டைகள்தாம். ஆனால் சண்டைக்குப் பின்வரும் சமாதானப் பகுதிகளின் இதனை நினைக்கையில். அவைகளுக்காகவே சண்டைகளை அருவித்துக் கொண்டோமோ, கொண்டேனோ என்றுகூட இப்பொழுது தோன்றுகிறது. X X X இத்தனை சண்டைகளுக்கும் சமாதானங்களுக்குமிடையில் பாகிக்கு மூன்று குறைப் பிரசவங்கள் நேர்ந்து உடல் சீரழிந் தாள். அவள் ஏற்கெனவே நோஞ்சான்தான். இனி அவள் கருத்தரித்தால், அவள் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர் கள் கூறிவிட்டனர். X X X சில சமயங்களில் நினைவில், முன் பின் தொடர்பில்லாது பிரும்மாண்டமான தாமரைக் கோலத்தின் நடுவில் நின்றபடி வழிந்த கூந்தலை தோள் பட்டையில் தள்ளிக் கொண்டு ஒரு முகம் நிமிர்ந்து, காலை வேளையின் பொற்கதிர் பட்டுக் கண் களில் தெறிக்கும் நீலத்துடன் என்னைப் பார்த்து நகைக்கும். "நான் சிந்தனையிலாழ்ந்து வியப்புறுவேன். அவள் இப் போது எங்கிருப்பாள்? அவளுக்கு இப்பொழுது குழந்தைகள் இருக்குமில்லையா? நான் அவளைப் பார்த்தபோதே ஏற் கெனவே அவள் ஒருவன் சொத்தோ என்னவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/150&oldid=1247248" இலிருந்து மீள்விக்கப்பட்டது