பக்கம்:இதழ்கள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

151

இதழ்கள் i51

இதெல்லாம் நான் இப்பொழுது எப்படிக் கண்டு பிடித்து முடியும்? கண்டு பிடித்துத்தான் என்ன ஆகவேண்டும்? அவள் யாரோ? நான் யாரோ? நாங்கள் மீண்டும் சந்திப் போமோ? X X 赏 திடீரென எனக்கு ஒரு நாள் தெரிந்தது. அவளும் நானும் சந்திக்கப்போவதில்லை. என்னை அறியாமலும் அறிந் தும், உள் நினைவிலும் வெளி நினைவிலுமாய், அவளை எண்ணி எண்ணி அவள் ஒரு எண்ணத்தின் பதவியை அடைந்து விட்டாள். அவள் எண்ணமாகிவிட்ட பிறகு, புலனின் உருவாக இனி எனக்குத் தென்படமாட்டாள்; பட்டாலும் என் எண்ணத்தில் அவள் வகிக்கும் லட்சிய, நித்ய உருவில் இருக்க முடியாது. - X X 氮 உடலில் புகுந்து புறப்படுவது உடலின் வேட்கை மாத் திரம் அல்ல, எண்ணத்தின் வேட்கை கூட, எண்ணத்தின் வேட்கைக்கு மாற்றுத் தேடவோ, அல்லது அதை மறக்கவோ அப்பவும் வழி, உடல் வழிதான். . - அதனால்தானோ என்னவோ, பாகி மீண்டும் கருத்தரித் தாள். இத்தடவை கரு தங்கியது. - திடீரென எங்களிடையில் இதுவரை இல்லாத ஒற்றுமை, அமைதி, ஒருவருக்கொருவர் ஆதரவு இழைந்தது. அதன் இன் பத்தைவிட ஆச்சரியமே ஓங்கியது! இது எந்த ஜாலத்தைச் சேர்ந்தது? தங்கி நிற்குமா? அல்லது சில சமயங்களில் கடும் கோடையில் துணுக்காய் ஒதுங்கி நாலே தூறல்களில் பிசு பிசுத்துவிடும் மேகத்தின் கதிதானா இதற்கும்? - . X X х - ஒரு நாள் திடீரென எனக்குத் தும்மிற்று. மார்புள் நெருப் புப் பிழம்பு வழிந்தாற்போல ஒரு சூடு, கண்ணில் லேசான கரிப்பு. நான் அசட்டையாயிருந்துவிட்டுப் பிறகு அகஸ்மித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/151&oldid=1247249" இலிருந்து மீள்விக்கப்பட்டது