பக்கம்:இதழ்கள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இதழ்கள்

#52 இதழ்கள் தாய் வைத்தியரிடம் காண்பித்தேன். என்னைப் பரிசோதித்த தும் அவர் முகங் கோணிற்று. பரீசுைகள் எல்லாம் நடந்தபின் எனக்குக் காசம் கண்டி ருப்பதாய்த் தெரிந்தது. நோய் அவசரமாகவே சுவாசப் பையில் பரவிவிட்டதாம்; ஆஸ்பத்திரியில் தனி விடுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டேன். எனக்குச் சீக்கிரம் குணம் ஆகவில்லை. பாகியும் நிறை கர்ப்பிணி. அவள் நிலையையும் ஜாக்கிரதையாகக் கவனிக்க வேண்டியதாகி விட்டது. பிரசவத்துக்குப் பிறந்த வீட்டுக்குப் போகுமுன், பாகி என்னைப் பார்க்க வந்தாள். வயிற்றின் சுமையைத் துக்கமாட் டாமல் துக்கிக் கொண்டு வருகையில், அவளைப் பார்க்க ஒரு பக்கம் வேடிக்கை, ஒரு பக்கம் பரிதாபமாயிருந்தது. X X X அவள் ஊருக்குப் போனபின், இரண்டு மூன்று கடிதங்கள் அடுத்தடுத்து வந்தன. அப்புறம் நாள் கழித்து ஒன்றிரண்டு கடித்ங்கள். தலைக்குப் பின்னால் கைகளைக் கோத்துக் கொண்டு தலையணைமேல் சாய்ந்திருக்கையில் குருட்டு யோசனையில் எண்ணங்கள் ஏதேதோ எழும். பிறந்து உழன்று, இதுவரை நான் வாழ்க்கையில் கண்டது என்ன? இல்லை, இந்தக் காணல், வேணலின் முடிவு தான் என்ன? என் நோய்வாய் நான் இங்கு படுகிறேன், அவள் சுமை வாய் பாகி அங்கு படுகிறாள். நாங்கள் கண்ட மிச்சம் இது தானா? சந்துருவின் அகாலமான திடீர்மரணம் தேவலையா? அல்லது நாளுக்கு நாள் ஒரு கணக்கில், மூச்சுக்கு மூச்சு ஒரு துளியாய், என் சுயநினைவோடு என் பிராணனை நான் விட்டுக் கொண்டிருக்கும் இந்நிலை தேவலையா? இம்மரணத் தில் நோயின் அவஸ்தை ஒரு பக்கமிருக்கட்டும். இதில் எங்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/152&oldid=1247250" இலிருந்து மீள்விக்கப்பட்டது