பக்கம்:இதழ்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இதழ்கள் 'அம்மா, நீ எப்படி இருப்பாய்?” “எப்படி இருப்பேன் என்றால்? எல்லாம் அம்மாவாய்த் தான் இருப்பேன்!” அவள் சமையலறையில் அடுப்பை ஊதிக்கொண்டிருந்தாள். புகை எண்ணைக் கரித்தது. அவன் கூடத்தில் ஊஞ்சலில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருந்தான். 'இல்லை அம்மா:பார்க்க நீ எப்படி இருப்பாய்?’ அடுப்பி லிருந்து சட்டென்று அவள் முகம் நிமிர்ந்தது. கொள்ளிக் கட்டையிலிருந்து தணல்கள் உதிர்ந்தன. அவள் வயிற்றில் பொறி கொதித்தது. நேரே அவனிடம் வந்து அவனை அனைத்துக் கொண்டாள்; ஏன் அப்படிக் கேட்கிறாய்?" 'இல்லை, நேற்று ராத்திரி அப்பா உன்னிடம் சொன் னாரே, அஞ்சனா, இன்று மிகவும் அழகாய்இருக்கிறாய் என்று நான் துரங்கிப் போய்விட்டேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தீர்களோ என்னவோ?’’ அவளுக்ருக் கன்னங்கள் குறுகுறுத்தன. அவனைத் தன் அருகே இழுத்து அவன் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். "அம்மா, அழகாக இருக்கிறதென்றால் என்ன? எல்லாரும் அழகாக இருக்கிறார்களோ? நான் அழகாக இருக் கிறேனோ?” அவன் பிடரியில் இரு நெருப்புத் துளிகள் சுரீலெனச் சுட்டுப் பொரிந்து நீர்த்தன. "அம்மா, ஏன் அழுகிறாய்? அம்மா அம்மா பையின் பதறிப் போனான். - “இல்லையடா கண்ணா!' மூக்கை உறிஞ்சினாள். 'இல்லை அம்மா, நீ அழுகிறாய். அழாதே அம்மா,’.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/45&oldid=1248476" இலிருந்து மீள்விக்கப்பட்டது