பக்கம்:இதழ்கள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

51

இதழ்கள் 51

கோபம் வந்து விட்டது. துரத்தித் துரத்தி அடித்தேன். ஒரு பையன் என்னிடம் மாட்டிக்கொண்டான். அவனை அடித்துக் கொண்டே இருக்கிறேன். அடிபட்டுக் கொண்டே அவன், கண்ணன் எப்போதுமே கண்ணாமூச்சி கண்ணன் எப்போ துமே கண்ணாமூச்சி என்றான். அப்போது எனக்கே அழுகை யும் சிரிப்புமாக வந்துவிட்டது,” 'கண்ணா, கண்ணா!” கதறிக் கொண்டு அவன் வாயை அவள் பொத்தினாள். அவளுக்கு மூச்சை அடைத்தது. தொண்டையில் எழுந்த வார்த்தைகள் முனகல்களாய்த் திணறின. அவள் கையைப் பிய்க்க முயன்றான். ~ 'என் கண்ணே கண்ணா! கண்ணா!’ அவன்ை இறு. அணைத்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள். அவனுக்கும் பயம் பிடித்துக் கொண்டது; திமிறினான். . . ‘என்னை விட்டுவிடேன். விட்டுவிடேன். ஆனால் அவள் பிடி இறுகிற்று. அவள் துயர வெறியால் உள்ளுற ஒரு மகிழ்ச்சியில் திளைத்தாள். அதைத் தன் மகனுக் கேனும் இழக்க மனம் இல்லை. எத்தனையோ நாட்களாய் அடக்கி வைத்திருந்த தவிப்பு உடைந்து ஓடும் ஒட்டத்தில் ஆடும் ஆட்டம்- . ‘என்னை விடு என்றால் விடு.” 'மாட்டேன்!” திடீரென வலியில் அலறி அவனைத் தள்ளினாள். "ஐயோ!' அவன் உள்ளே வந்து கொண்டிருக்கும் ஆள்மேல் தடாலென விழுந்தான். அவர் அவனை அப்படியே ஏந்திக் கொண்டார். * “என்ன இது?” நோய்! நாய்!” - - இடத்தோளை மறுகையால் தேய்த்துக் கொண்டாள், "இதோ பாருங்களேன்; நாலு பல்லும் பதிந்திருக்கிற மத்தை” வலியைக் காட்டிலும் பற்களின் பதிவை: தும் அவளுக்கு அழுகைஅழுகையாய் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/51&oldid=1247330" இலிருந்து மீள்விக்கப்பட்டது