பக்கம்:இதழ்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இதழ்கள்

60 இதழ்கள் கன்னங்களிலும் முத்தமிட்டான். அப்பாவின் கண்களில் நீர் கல்கிற்று. அவர் உடல் கிடுகிடென ஆடிற்று. 'எனக்கு அப்போதே தெரியும் அப்பா. *னன்னது?’’ 'நீ அன்றைக்கே சொல்லியிருக்கிறாய்.” "என்னது? "நீயும் நானும் தோஸ்த்.” தோஸ்த்?’’ - - "என்ன அப்பா மறந்துவிட்டாய்? அன்றைக்கு நீ ந. அம்மா எல்லாம் மூட்டை எல்லாம் கட்டிக்கொண்டு அண்ட் யாற்றுக்குப் பிக்னிக் போனோமே! மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு சாதம் எல்லாம் சாப்பிட்டான பிறகு அம்மாவும் நீயும் பேசிக்கொண்டிருந்தீர்கள். எனக்குக் கைநிறையப் பெரி தாகப் பூ ஒன்று கீழே அகப்பட்டது. அது மாதிரி நிறையச் சுற்றி விழுந்து கிடக்கிறது என்றாய். நான் குனிந்து ஒவ் வொன்றாகப் பொறுக்கிக்கொண்டே போனேன். அப்போது ஒரு வேர் தடுக்கிக் கீழே விழுந்துவிட்டேன். பூவெல்லாம் கடியிலிருந்து கொட்டிப் போயின. எனக்கு வலியும் கோபமு மாக அழுதேன். நீ ஓடி வந்து என்னை வாரி எடுத்துக்கொண் டாய். என்ன என்னவோ செல்லம் கொஞ்சிக் கண்ணைத் துடைத்துச் சமாதானப்படுத்தினாய். அப்போது நீயும் நானும் தோஸ்த்’ என்றாய். நான்கூட, தோஸ்த் என்றால் என்ன? என்றேன். நீ சொன்னாய், சிநேகிதர்கள், ஒரே மாதிரி ப்ரெண்ட்ஸ் என்ன அப்பா அதற்குள் மறந்துவிட்டாயே? அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அவன் கைகள் மகனைச் சுற்றி இறுகின. அந்த நாளை எப்படி மறக்கமுடியும்? அன்று வீடு திரும்பும்போது நேரமாகிவிட்டது. அலைந்த அலுப்பு-வந்து படுக்கையில் விழுந்ததுதான் தெரியும்; மறுபடியும் விழிப்பு வந்ததும் பார்வை நேரே மகன்மேல் சாய்ந்தது, குழந்தை நிம்மதியாய்த் தூங்கிக் கொண்டிருந் தான். ஆனால் அவன் பக்கத்தில் அவன் தாயைக் காண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/60&oldid=1247158" இலிருந்து மீள்விக்கப்பட்டது