பக்கம்:இதழ்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இதழ்கள்

72 இதழ்கள் இந்தத் தவிப்பு தனக்கே புரியவில்லையே; பிள்ளைக்குத் தெரியபடுத்த முடியுமோ?...... மேல் கதை மேல் கதை!” "அவர்கள் ராஜா ராணியல்ல. ஆனால் அவர்கள் குழந்தை ராஜகுமாரனாய்த்தான் இருந்தான். செக்கச் செவே லென்று கொழு கொழுவென்று குண்டு ராஜா. அடர்ந்த மயிர் இப்போதே, கண்களின் மேல் வழிந்தது அப்பா, கண் கனா கண்கள் கண்ணா, நிஜமாய் அவ்வளவு அழகான கண்கள் இருந்திருக்கவே முடியாது. பெற்றவர்களின் கண் களால் மாத்திரம் பார்த்த கண்களல்ல அவை: கண்களில் கண்கள்-’ "அப்பா, நீ சொல்கிறது புரியவில்லை. அப்பா, ஆனால் சொல்கிறது என்னவோ பண்ணுகிறது அப்பா, புரிகிறாப் போல-அப்புறம் என்ன?” 'குழந்தையைப் பார்த்துக்கொள்ள அவளுக்குப் பொழுது போதவில்லை. இத்தனைக்கும் அவள் தாய்தான் குழந்தைக் காரியங்கள், வீட்டுக் காரியங்கள் அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்தாள். அத்துடன் பெண்ணையும் அடை காத்துக் கொண்டிருந்தாள். அவன் மாமியாருக்குக் கோபம். கைக் குழந்தைக்காரியை இன்னும் நான்கு மாதங் களுக்குப் பிறகு அனுப்பத்தான் இஷ்டம்.” 'இந்தக் காலத்துச் சிறிசுகளையே என்ன புரிந்துகொள்ள முடிகிறது? அவர்களுக்குத்தான் என்ன தெரிகிறது? நாங்கள் எல்லாம் இப்படித்தான் இருந்தோமா, என்ன? பெரியவர்கள் எதைச் சொன்னாலும் நல்லதுக்குத்தான் சொல்வார்கள் என்று ஒரு நம்பிக்கை, பக்தி, மரியாதை-ஊ-ஊம்; அதெல்லாம் ஏது இப்போது? பத்துப் பேர் சேர்ந்து ஒரு குடும்பம் நடக்கிற இடத்திலே ஒர் அகமுடையான் பெண் டாட்டி என்று தனியாய் ஒரு கடிதாசை எழுதிவிட முடியுமா என்ன? அப்படியேதான் அகமுடையான் எழுதினால் பெண் டாட்டிக்குப் படிக்கத் தெரியுமா? என்னவோ மாற்றி மாற்றி இவர்களே கடிதாசு எழுதிக்கொண்டு இவர்களே ஏற்பாடு பண்ணிக்கொண்டு. அவர்தான் இவளை வரச் சொன்னாரா? இல்லை, இவள்தான் அவரைத் தூண்டினாளா? எதை நம்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/72&oldid=1247170" இலிருந்து மீள்விக்கப்பட்டது