பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ציל உத்தம மாணவன் கசன். 4' தேசித்த மந்திர சக்தியினுல் உடனே பிழைப்பிக்கவேண்டும்; குருவாகிய என்னிடமிருந்து வித்தையைக் கற்றுக்கொண்ட நீ என்னே வஞ்சித்து விடாதே' என்று கூறி மந்திரத்தைக் கசனுக்கு உபதேசித்தார். கசன் அவ்விக்கையைக் காதாற் கேட்டுக் கற்றுக்கொண்டு, சுக்கி:ர் வயிற்றைப் பிளந்து வெளியில் வந்தான். சுக்கிரஸ் உடனே விழுந்திறந்தார். கசன் குருவின் கட்டளைப்படி காழ்க்காது அவரைச் சஞ்சீவினி மந்திர சக்தியினுல் உயிர்பெற்றெழச் செய்தான். இவ்வாறு வாய்மை தவருது கசன் சுக்கிாரை எழுப்பாது விட்டிருப்பின் அசுரர்கள் யாவர்க்கும் அேைற நாசகாலம் அடுத்திருக்கும். சுரர்கள் யாவர்க்கும் தன்மையின்மேல் தன்மை பல விளேர் திருக்கும். கசனே, குரு பக்தியைப் பிரதானமான சீல மாகக்கொண்ட உத்தம மாணுக்களுதலின் பகைவர்க்கு நெறியல்லா நெறியால் பாதகத்தையும் நண்பர்களாகிய தேவர்கட்குச் சாதகத்தையும் தேடுவது முறையன்று என்று கருதி அத்தீய எண்ணத்தைச்சிறிதும் சிந்திக்கவில்லை. அதன் மேல் கசன் ஆசிரியரை அணுகி, வத்தனஞ் செய்து, சுவாமி வித்தையில்லாதவர்கட்கு வித்தை யென் லும் தீஞ்சுவையமிழ்தைச் செவியிற் பிழிகின்றவர் எவரோ? அவரே ஒருவனுக்குத் கங்தையும் தாயுமாவார்; சுவாமிகள் என் விஷயத்தில் அத்தகைய சீரிய நன்றியைச் செய்தீர் களாதலின் தாங்களே எனக்குத் தந்தையும் தாயுமாவீர்கள். எல்லாச் செல்வங்களிலும் சிறந்த, அழியாத வித்யா செல் வத்தை யளித்த குருசிகாமணியை எவனுெருவன் பூஜிக்கா மல் அவமதிக்கின்முனே அவன் மக்கட்பதடியாய்ப் பின்பு